பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 நீர்ப்படைக் காதை

கேட்பதற்குத் தக்க அரங்கங்களையும், பேரிசை மன்னர்க்கு வேண்டுவன பிறவும் ஆரிய அரசர்கள் ஆகிய நூற்றுவர் கன்னர் அமைத்துத் தந்தனர்.

அங்கே வேந்தன் அமர்ந்திருந்து களத்தில் உயிர்விட்ட வீரர்களை உளமாரப் பாராட்டினான், அவர்கள் வாரிசுகள் ஆகிய அவர்தம் மக்களுக்கும் சுற்றத்தினருக்கும் பரிசுகள் தந்தான்; உயிருடன் வெற்றி விளைவித்துத் திரும்பிய வீரர்களுக்குப் பரிசுகள் தந்து பாராட்டினான்.

திருவோலக்கத்தில் பெருமிதத்துடன் வீற்றிருந்த அர சனைக் காண அங்கு மாடலன் என்னும் மறையவன் வந்து சேர்ந்தான். 'வாழ்க எம் மன்னன்' என்று முதற்கண் சேரனை வாழ்த்தி அவன் பெற்ற வெற்றியைத் தொகுத்துக் கூறினான். “மாதவி மடந்தை கானற் பாணி கனகவிசயர் தம் முடித்தலை நெரித்தது” என்று எள்ளல் சுவைபடத் தொகுத்துக் கூறினான். "எங்கோ எழுந்த சிறு பொறி அது கொழுந்துவிட்டுப் பெரிதாகிப் போரில் முடிந்தது; வடவரை அடிமைப்படுத்தியது' என்று சொல்திறன் படக் கூறினான்.

அங்குக் கூடியிருந்த மன்னர்களுக்கு இது புதிராக அமைந்திருந்தது; விடுகதை போல விளக்கமற்றுக் கிடந்தது. அரசன் மாடலனை நோக்கி, "பகைப்புலத்து அரசர் பலர் இதை அறியமாட்டார்கள். நகைத்திறம் படக் கூறிவிட்டாய். மறைகற்ற பெரியோய்! நீ கூறிய உரையின் கருத்து யாது? அதனை விரித்துக் கூறுக' என்று கேட்டுக் கொண்டான்.

செய்திகள் கூறுதல்

மாடலன் ஆகிய மறையவன் மன்னனுக்கு அச்செய்தி களை விவரித்துக் கூறினான்.

'கடற்கரைப் பாட்டில் மாதவி கூற்றில் கண்ட குறை அது ஊடலாக அமைய ஊழ்வினை காதலர் இருவரைப் பிரித்தது; அதன் தொடர் நிகழ்ச்சியாகக் கோவலன் தன் துணைவியுடன் மதுரை சென்றான். அங்கே காவலனால் பழிசுமத்தப்பட்டுக் கொலைக் களத்தில் வெட்டுண்டான்; பட்ட மரமாகிய கண்ணகி