பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 365

நோக்கி 'நாள் கணக்கிட்டுப் பார்த்து இதுவரை வஞ்சியை விட்டு அங்கு வந்து திங்கள் முப்பதும் இரண்டும் ஆயின; இனி நாடு திரும்புதல் தக்கது' என்று ஏடு கூறுவதாகத் தெரிவித்தான். மாளிகை சென்று தனியே ஒய்வு எடுத்தான்.

சோழ நாடு

அதற்குள் சோழ நாட்டின் சேதிகளை அறியச் செங் குட்டுவன் விரும்பினான்; மாடலனை மறுபடியும் அழைத்து வினாவினான். 'சோழ மன்னன் கிள்ளிவளவனை எதிர்த்த குறுநில மன்னர் ஒன்பதின்மரை நீ ஒரு காலத்தில் போரிட்டு வென்றாய்; அவர்கள் மறைந்தனர்; அதன்பின் எதிர்ப்புகள் இன்றி நாட்டை எழிலுறச் சோழன் ஆட்சி செய்து வருகிறான்' என்று அரசனுக்கு மாடலன் அறிவித்தான்.

மாடலன் சோழர் தம் முன்னோர்களின் பெருமையைக் கூறி 'அத்தகைய மரபில் வந்தவன் சோழன் கிள்ளிவளவன்; அவன் நாட்டில் எந்தக் குறையும் இல்லை' என்று அறிவித்தான்.

'விண்ணவர் வியக்க எயில் மூன்றினை அறுத்து எறிந்து வெற்றிச் சிறப்புடையவன் சோழன் செம்பியன்; விரத்துக்கு அவன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. புறாவின் உயிரைக் காக்கத் தன் உடம்பினை அறுத்துக் கொடுத்துப் பருந்தின் பசியைத் தீர்த்தவன் சிபிச் சோழன்; அவன் அருளுக்கு ஒர் அடையாளமாக விளங்கியவன். வீரமும் அருளும் மிக்க செங்கோல் வேந்தர்கள் ஆண்ட நாடு சோழநாடு; அத்தகைய சிறப்பு மிக்க நாட்டை ஆள்பவன் செங்கோல் வழுவுவது இயலாது; அவன் ஆட்சி செம்மையாக நடைபெறுகிறது” என்பதை எடுத்துக் கூறினான்.

பொன்னை அளித்துப் பாராட்டு

காவிரி புரக்கும் நாட்டவன் ஆட்சி சிறப்பாக உள்ளது என்று முப்புரி நூலோன் எடுத்துக் கூற அவன் மடுத்துக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான். நாடுகள் பல திரிந்து நலம் அனைத்தும் நவின்ற அந்தணாளனை மதித்துச் செங்கோல் வேந்தனாகிய சேரன் செங்குட்டுவன் அவனுக்குப் பொன் அளந்து கொடுத்துச் சிறப்புச் செய்தான். தன் எடைக்கு நிகராக