பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 367

செய்யும் குறுகிய வடிவுபடைத்த கூனியர்களும், குறளர்களும் சென்று 'பெறுக நின் செவ்வி; பெருமகன் வந்தான்; நறுமலர் கூந்தல் நாள் அணிபெறுக' என நற்செய்தி நவின்றனர்.

பாட்டிசைத்தல்

குன்றக் குறவர் இளம் பெண்கள் குறிஞ்சிப்பண் பாடினர். அவர்கள் சேரனின் வெற்றிச் சிறப்பைப் பாடினர். இந்த இன்னிசை கேட்டுத் தினை கவர்ந்து உண்ண வந்த யானைகளும் மயங்கி அசைவற்று நின்றுவிட்டன. சேரன் வருகைக்குக் குறுக்கே நிற்காதீர் என்ற கருத்துப்பட நெஞ்சை உருக்கும் பாடல்களை அவ்வஞ்சி இளம் குறத்தியர் பாடி அரசியை மகிழ்வுறச் செய்தனர்.

'வடதிசை சென்றவன் பகைவர்கள் எயில்களை முருக்கி அவற்றை அழித்துவிட்டுத் திரும்பி வந்துவிட்டான். குடவர் கோமான் வெற்றி கேட்டு மகிழ்க; நாளை அவன் பிறந்த நாள் அணிவிழா நடைபெற இருக்கிறது; எருதுகளே, நுகத்தடி பூண்க! உழவுத் தொழில் சிறக்க, பகை அரசர் கால் விலங்குகள் விலகும் நாள் இது; அவன் வெள்ளணி உடுத்து மகிழும் பிறந்த நாள்' என்று உழவர் பாடினர். இது மருதப் பாடலாகத் திகழ்ந்தது; இம் மருதப் பாடலைக் கேட்டு மன்னன் துணைவி மகிழ்வு கொண்டாள்.

குவளைப் பூவையும், முண்டகப் பூவையும் கோவலர்கள் தலைமுடியில் சூடிக் கொண்டனர்; தாமரை மலர்களை அணிந்து கொண்டனர்; தாழையின் கிளைகளில் அமர்ந்து இருந்து இவர்கள் குழலிசை பாடினர்; 'வில்லவன் வந்தான். இமயத்திலிருந்து ஆநிரைகளைக் கொண்டு வந்துள்ளான்; அப்பசுக்களோடு நீவிரும் உடன் சென்று நீர்த்துறை படிவீர்!’ என்ற கருத்து அமைய அவர்கள் முல்லைப் பண்ணைக் குழலிசையில் தந்தனர். இவ் இசையைக் கேட்டுச் சேன் மனைவி மகிழ்வு அடைந்தாள்.

இவ்வாறே நெய்தல் நிலத்து இளம் பெண்கள் முத்துகளை வைத்துக் கழங்காடிக் கொண்டு சேரனின் வெற்றிச் சிறப்பைப் பாடினர்; 'சேரன் வந்தான்; நம் இளமுலைகள் அவன் தோள்