பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சிலப்பதிகாரம்

புகாரைச் சிறப்பித்துப் பாடுதல்

சார்த்துவரி தோழி வரைவு கடாவுதல் கரியமலர் நெடுங்கண் காரிகைமுன்

கடல் தெய்வம் காட்டிக் காட்டி, அரியசூழ் பொய்த்தார் அறண்இலர் என்று

ஏழையம் யாங்கு அறிகோம், ஐய! விரிகதிா வெண்மதியும் மீன்கணமும்

ஆம் என்றே, விளங்கும் வெள்ளைப் புரிவளையும் முத்தும் கண்டு ஆம்பல்

பொதி அவிழ்க்கும் புகாரே, எம் ஊர்! 5 காதலர் ஆகிக் கழிக்கானல்

கையுறை கொண்டு, எம்பின் வந்தார் ஏதிலர் தாம் ஆகி, யாம் இரப்ப,

நிற்பதை யாங்கு அறிகோம், ஐய? மாதரார் கண்ணும், மதிநிழல்நீர்

இணைகொண்டு மலர்ந்த நீலப் போதும், அறியாது வண்டு ஊசல்

ஆடும் புகாரே, எம் ஊர், 6 மோது முதுதிரையான் மொத்துண்டு,

போந்து அசைந்த முரல்வாய்ச் சங்கம் மாதர் வரிவணல்மேல் வண்டல் உழுது அழிப்ப மாழ்கி, ஐய கோதை பரிந்து அசைய, மெல்விரலால்

கொண்டு ஒச்சும் குவளை மாலைப் போது சிறக்கணிப்பப் போவார்கள்ை

போகாப் புகாரே, எம் ஊர் 7

கானல்வரி முகமில்வரி துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல் உழுத

தோற்றம் ஆய்வான் பொறைமலி பூம்புண்னைப் பூஉதிர்ந்து நுண்தாது

போர்க்கும் கானல்,