பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடுகாண் காதை 63

அடங்கா வேட்கையின் அறிவுஅஞர் எய்திக் குடங்கையின் கொண்டு, கொள்ளவும் கூடும்; 85

குறுநர் இட்ட குவளை அம் போதொடு பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை, நெறிசெல் வருத்தத்து நீர் அஞர் எய்தி, அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும் ! எறிநீர் அடைகரை இயக்கந் தண்ணிற் 90

பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது ஊழ்அடி ஒதுக்கத்து உறுநோய் காணின், தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா; வயலும் சோலையும் அல்லது. யாங்கணும் அயல்படக் கிடந்த நெறி ஆங்கு இல்லை; 95

நெறிஇருங் குஞ்சி; நீ வெய் யோளொடு குறிஅறிந்து அவை அவை குறுகாது ஒம்பு எனத்தோம்அறு கடிஞையும், சுவல்மேல் அறுவையும், காவுந்தி ஐயைகைப் பீலியுங் கொண்டு, மொழிப் பொருள் தெய்வம் வழித்துணை ஆகு' எனப் 100

பழிப்பு:அரும் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர் - கரியவன் புகையினும், புகைக்கொடி தோன்றினும், விரிகதிர் வெள்ளி தெண்புலம் படரினும், கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும் சூல்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்பக் 105

குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு கடல்வளண் எதிரக் கயவாய் நெரிக்கும் காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை ஒ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது. ஆம்பியும், கிழாரும், வீங்கிசை ஏத்தமும் 110