பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சிலப்பதிகாரம்

வைகறை யாமத்து வாரணம் கழிந்து, வெய்யவன் குணதிசை விளங்கித் தோன்ற, வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்ததோர் இளமரக் கானத்து இருக்கை புக்குழி

வாழ்க எம் கோ. மன்னவர் பெருந்தகை 15 ஊழிதொறு ஊழிதொறு உலகங் காக்க ! அடியில் தண் அளவு அரசர்க்கு உணர்த்தி, வடிவேல் எறிந்த வாண்பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள, 20 வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு, தென்திசை ஆண்ட தெண்னவண் வாழி ! திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச் செங்கண் ஆயிரத்தோன் திறல்விளங்கு ஆரம்

பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி 25 "முடிவளை உடைத்தோன் முதல்வன் சென்னி" என்று, இடியுடைப் பெருமழை எய்தாது ஏகப், பிழையா விளையுள் பெருவளஞ் சுரப்ப, மழைபிணித்து ஆண்ட மண்னவண் வாழ்க்!"எனத் தீதுதிர் சிறப்பின் தெண்னனை வாழத்தி, 30 மாமுது மறையோன் வந்திருந் தோனை, 'யாது நம் ஊர் ஈங்கு எண் வரவு ' எனக் கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்

மாமறை யாளன் வருபொருள் உரைப்போன்;

நீல மேகம் நெடும்பொற் குண்றத்துப் 35

பால்விரிந்து அகலாது படிந்தது போல, ஆயிரம் விரித்துஎழு தலைஉடை அருந்திறல் பாயற் பள்ளிப் பலர்தொழுது ஏத்த, விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும் -