பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறஞ்சேரி இறுத்த காதை 87

'அடிகள் முன்னர் யாண் அடி வீழ்ந்தேன்; வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்; குரவர்பணி அன்றியும் குலப்பிறப்பு ஆட்டியோடு இரவிடைக் கழிதற்கு, எண் பிழைப்பு அறியாது; 90 கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் பொய்தீர் காட்சிப் புரையோய், போற்றி! என்றுஅவள் எழுதிய இசைமொழி உணர்ந்து 'தண்தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கி, 'எண் தீது' என்றே எய்தியது உணர்ந்து ஆங்கு- 95 எற்பயந் தோற்குஇம் மண்உடை முடங்கல். பொற்பு உடைத் தாகப், பொருள்உரை பொருந்தியது மாசுஇல் குரவர் மலர் அடி தொழுதேன் கோசிக மாணி காட்டு எனக் கொடுத்து. 'நடுக்கங் களைந்து, அவர் நல்லகம் பொருந்திய 100 இடுக்கணி களைதற்கு ஈண்டு' எனப் போக்கி மாசுஇல் கற்பின் மனைவியோடு இருந்த ஆசுஇல் கொள்கை அறவிபால் அணைந்து, ஆங்கு,

பாணரொடு அளவளாவல் ஆடுஇயல் கொள்கை அந்தரி கோலம் பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து, 105 செந்திறம் புரிந்து செங்கோட்டு யாழில், தந்திரி கரத்தொடு திவவுஉறுத்து யாஅத்து. ஒற்றுஉறுப்பு உடைமையின் பற்றுவழிச் சேர்த்தி உழைமுதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி, வரண்முறை வந்த மூவகைத் தானத்து, 110 பாய்கலைப் பாவை பாடற் பாணி ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டுப், பாடற் பாணி அளை இ. அவரொடு கூடற் காவதம் கூறுமின் நீர் எனக் காழ் அகில், சாந்தம், கமழ்பூங் குங்குமம் 115