பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிகம்

வினைவிளை காலம் ஆதலின், யாவதும் சினை அலர் வேம்பண் தேராண் ஆகிக் கன்றிய காவலர்க் கூஉய், "அக் கள்வனைக் கொண்றுஅச் சிலம்பு கொணர்க ஈங்கு" எனக் கொலைக்களம் பட்ட கோவலன் மனைவி நிலைக்களம் காணாள், நெடுங்கணி நீர் உகுத்துப் பத்தினி ஆகலின், பாண்டியண் கேடுற முத்தார மார்பின் முலைமுகம் திருகி, நிலைகெழு கூடல் நீள் எரி ஊட்டிய பலர் புகழ் பத்தினி யாகும் இவள் என

இளங்கோ வினா "வினைவிளை காலம் என்றீர்; யாது.அவர் வினை விளைவு?" என்ன.........

சாத்தனார் விளக்கம்

- - - - - - - - - - - - - - "விறலோய் கேட்டி அதிராச் சிறப்பின் மதுரை மூதுார், கொண்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில் வெள்ளியம் பலத்து, நள்ளிருள் கிடந்தேன்; ஆர் அஞர் உற்ற வீர பத்தினிமுண் மதுரைமா தெய்வம் வந்து தோன்றிக், கொதியழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய்! முதிர்வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின், முந்தைப் பிறப்பில், பைந்தொடி கணவனொடு சிங்கா வணி புகழ்ச் சிங்க புரத்துச் சங்கமண் என்னும் வாணிகண் மனைவி இட்ட சாபம் கட்டியது ஆகலின், வார் ஒலி கூந்தல்! நின் மணமகன் தன்னை ஈர் ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி, வானோர் தங்கள் வடிவில் அல்லதை ஈனோர் வடிவில் காண்டல் இல் எனக் கோட்டம் இல் கட்டுரை கேட்டனண் யாண்" என

30

35

40

45

50