பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ காட்சி - கு விழாவும் விளைவும் சேரன் அரண்மனை [பிறந்த நாள் விழா நடைபெறும் கொலுமண்டபம் மிக்க அழகுற அமைக்கப்பட்டிருக்கிறது. வேந்தன் நெடுஞ் சேரலாதனும் அரசி நற்சோணையும் அமர்ந்திருக்கிறார்கள் அரியாசனத்தில்! வில்லேந்திய வீரர்குல மங்கையரின் கூத்து நடைபெறுகிறது. செங்குட்டுவனும் இளங் கோவும் மண்டபத்தில் நுழைந்திடும்போது, கூத்தாடும் பாவையர், அவர்களை எதிர்கொண் உழைத்து அரசர் இருக்கையிடம் அழைத்துச் செல்கிறார்கள். இருவரும் பெற்றோரை வணங்கி அருகே அமர்கிறார்கள். தொடர்ந்த கூத்து முடிகிறது. நெடுஞ்சேர லாதன் எழுந்து வாழ்த் துரையாற்றுகிறான்) நெடுஞ்சேரலாதன்: அவை யத்துப் பெருமக்காள்! சேர நன்னாட்டின் செழிப்பையும் புகழையும் பெருக்கிடும் ஆற் றல் பெற்ற செங்குட்டுவனை மகனாகப் பெற்றதை எண்ணி எண்ணி என் மனம் துள்ளு கிறது இன்று! தம்பியுடை யான் படைக்கஞ்சான் எனும் பழமொழிக்கேற்ப இளங் கோவை இளையோனாகப் பெற்ற என்னருஞ் செல்வனை வாழ்த்துகிறேன், இந்த நன் னாளில்! விரைவில் செங்குட்டு வன் முடிசூடி செங்கோல் ஏந்தி, தமிழ் அறம் வளர்ப் பான் என்றும்...அந்நாள் அண்மையில் அமையுமென் றும் அறிவிக்கின்றேன்... அவையோர்: வாழ்க செங்குட் டுவன்! செங்குட்டுவன் வாழ்க!!