பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பா!... அம்மா?.. அண்ணி!... அண்ணா! வருகிறேன்..... [அனைவரது விழிகளிலும் நீர் பெருகி வழி கிறது] [இளங்கோ வடிகள் அரண்மனையைத் துறந்து.) எதிரே நிமித்திகன் வருகிறான்.) நிமித்திகன்: யார்? இளங்கோவா?... என்ன இது?.. இளங்கோ: நீர் பெருமையோடு பேசினீரே அந்த விதியின் வீழ்ச்சி! மதியின் வெற்றி! தோல்வி கண்ட முகத்தைத் தொங்க விட்டுக் கொண்டு உமது தொழிலையே துறந்து விட்டு என்னைத் தொடர்ந்து வாரும். வெளியேறுகிறார் நிமித்: ஆ!. அரண்மனை வாயிற்புறம். [இளங்கோவடிகள் வெளியேறுவதைக் காவலர் அனைவரும் கண்கலங்க கவனிக்கிறார் கள்! நாவலர், பாவலர் அனைவருமே அமைதி நிறைந்த சோகத்தோடு மரம்போல் நிற்கிறார் கள். பெண்டிரும், பாலரும், உழவரும், வணி கரும் சித்திர உருவங்களாய் அசையாது நின்று விடுகின்றார்கள். மாளிகையிலிருந்து அன்னை, தந்தை, அண்ணன், அண்ணி காணுகிறார்கள். இளங்கோவடிகள் வெகு தொலைவில் போய் விடுகிறார்........ இளங்: ஏன் முடியாதா?....உள்ளம் பக்குவ மடையவில்லையா? ஊழ்வினை தடுக்கிறதா? வருகிறேன்! (நிமித்திகன் வியப்போடு தனக்குள்] நிமித் : இப்போது பிழைப்பே போனது; இனி மாளிகைப் பக்கம் போனால் மானம் போய் விடும். தோல்வி! பெரிய தோல்வி!! [திகைத்து நிற்கும் நிமித்திகனோடு காட்சி முடிகிறது.] காவிரி - கூடலில் கலக்கும் காட்சி