பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ஸ் காட்சி-5 % சிலம்பின் சேரநாடு பேரியாற்றங்கரையை அடுத்துள்ள மலை வளமிக்க பகுதி. தினைப்புனங்களில் கிளிகளை ஓட்டுகின்ற ஒலியும் ஆலோலப் பாடல்களும்... யானைகளும் புலிகளும் நிறைந்த இடமென் பதை விளக்கும் சூழ்நிலைகள்...மலைப்பகுதியில் மலைமகளிரும் ஆடவரும் அவரவர்கள் தலையி லும் தோளிலும் பல பொருள்களைச் சுமந்து நடக்கின்றனர். கூடைகள், மூட்டைகள், மான்குட்டிகள், புலிக்குட்டிகள், குரங்குகள்... இப்படிப் பலவகைப் பரிசுப் பொருள்களுடன் பயணம் நடத்துகின்றனர். வரும் வழியில், மலையடிவாரத்தில் நின்று கொண்டிருந்த இளங்கோவடிகளை வணங்கு கின்றனர்.]

இளங்கோவடிகள் : மலைவாழ் தமிழர்களே!... பேரியாற்றங்கரை நோக்கிப் போவதுபோல் தெரிகிறதே...எதற்காகவோ? ஒருவன்: அடிகளாருக்குத் தெரியாதா? தங் கள் அண்ணன் செங்குட்டுவ மன்னரும் புலவர் சாத்தனாரும் இயற்கை வளங் காண் பதற்காகப் பேரியாற்றங்கரைக்கு வந்திருக் கிறார்கள். அவர்களுக்குப் பரிசாக இவை களை... இளங் அப்படியா! நானும் வருகிறேன். [அனைவரும் பயணத்தைத் தொடருகிறார்கள்.] [பேரியாற்றங்கரை : இரண்டு யானைகள் போர் நடத்துவதை செங்குட்டுவன், வேண்மாள், சாத்தனார் மூவரும் வேடிக்கை பார்க்கிறார்கள்... அப்போது- இளங்கோவும் மலைமாந்தரும் வருகிறார்கள்.] செங்கு : தம்பி! இளங்: அண்ணா! [தழுவிக் கொள்கிறார்கள்] இளங் : அண்ணி...சுகந்தானே! [அவள் தலையசைக்கிறாள்]

இளங்: சாத்தனாரே... தாங்களும்... சாத்தனார்: மலைவளங் காணவந்தேன். மன் வளம் மிகுந்த தங்களைக் காணும் வாய்ப்பும் பெற்றேன். இளங்: அண்ணா! இந்தப் பகுதி மலை மக்கள் தங்களுக்குப் பரிசுப் பொருள்கள் அளிக்க விரும்புகிறார்கள். செங்கு: அப்படியா!... மலைமக்கள் : வணக்கம்!... [அனைவரும் வணங்குதல்] யானைத்தந்தம், தேன், சந்தனக்கட்டை, தேங்காய், கரும்பு, மாங்கனி,பலாக்கனி, வாழைக்குலை, சிங்கக்குட்டி, புலிக்குட்டி, யானைக்குட்டி, குறும்பாடு, மான்குட்டி, கீரிப் பிள்ளை, தோகைமயில், புனுகுபூனை, கிளி ஆகிய பரிசுப் பொருள்களை எதிரே குவிக்கின்றனர்.] செங்கு: மிக்க நன்றி! மகிழ்ச்சி!! தமிழ்நாட்டு வளங்கள் என் றென்றும் வாழ்க! அன்புள்ள வர்களே... இந்தப் பகுதியில் ஏதாவது புதுமை உண்டா? ஒருவன்: உண்டு, உண்டு! கணவனை இழந்த ஒரு பெண்... கண்ணகி யென்ற பெயருடை யவள்... அதோ அந்த வேங்கை மரத்து நிழலிலேயே பல நாட் கள் நின்றுகொண்டிருந்தாள்... கணவன் வருவான் வருவான்