பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ண்டு காட்சி - 6 00 பூம்புகார்ப் பொற்றெடி (சாத்தனார் குரலுடன் பூம்புகார்க் காட்சிகள்] சாத்தனார்: காவிரியாறும் கடலும் முத்த மிட்டுக் கொள்ளும் இடத்தில் அமைந்துள்ள அழகுத் திருநகராம் பூம்புகார்ப் பட்டினம்! புலிக் கொடியின்கீழ் ஆட்சி நடாத்தும் சோழப் பேரரசின் தனிப்பெருந் தலை நகரம்- ஆங்கே ஆண்டுதோறும் நடைபெறும் இந்திர விழா பெருமை வாய்ந்த திருவிழா! கடற்கோளுக்கு முன், கடாரம் வரை பரந்து கிடந்த சோழ மண்டிலத்து மூதாதையொரு வன் - இந்திரன் என்னும் பழந்தமிழன்- அவன் நினைவாக நடைபெறும் எழுச்சி விழா! அவ் விழாவில் நகர மாந்தரும் வெளிநாட்டு வணிகப் பெருமக்களும் பங்கு கொண்டு ஆடிப்பாடி மகிழ்வர்... பட்டினப் பாக்கம், மருவூர்ப் பாக்கம், நாளங் காடி எனப் பிரிக்கப்பட்டுள்ள பூம்புகாரின் முப் பகுதிகளிலும் மகிழ்ச்சிக் கூத்து!... கரிகால் சோழனுக்கு அவந்தி மன்னன் பரிசாக அளித்த தோரண வாயில்!... வச்சிர நாட்டு மன்னன் காணிக்கையாகத் தந்த முத்துப் பந்தல்! மகத தேசத்து வேந் தன் கப்பமாக அளித்த பட்டிமண்டபம்! எங்கெங்கும் இன்பப் பெருவெள்ளம்! வீதிகளில் பூரண கும்பம்! பொற் பலகை! பாவை விளக்கு!-எங்கும் விழாக் கோலம்! தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! 34