பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மாதவி: அம்மா... ஒருவரை மணந்து வாழ் வேன் என்றேன்-இப்போது கன்னிப் பெண் ணாகவே காலங் கழிக்கத் தீர்மானித்து விட்டேனம்மா. சித்ரா : உன் இஷ்டப்படி நாட்டியமாட என் னால் முடியாது!... [கண்ணகி கோவலனிடம்] கண் : ஐயோ, பாவம்; மாதவி!...அத்தான்! நீங்கள் தான் போய் அவளைக் காப்பாற்றுங் களேன்! வாங்குகிறவர் கி.கிழவர்: பிறகேன் மாலை அடையலாம் என்று மாதவியை வேண்டும்?... கூற கோவ: மாலை வாங்கத் தகுதியுடையவன் மாதவியை அடையலாமென்பது அவள் தாயாரின் நிபந்தனை. மாதவியை அடை யத் தகுதியுடையவனே மாலையை வாங்கலா மென்பது என் தீர்ப்பு. வாருங்கள் போகலாம். கி.கிழவர் : முடியாது! என்னைத் தவிர வேறு யாரும் மாதவியை அடைய முடியாது! கோவ: ஏன்?... கி.கிழவர்: ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் தரக்கூடிய தகுதி வேறு யாருக்குமில்லை இங்கு! கோவ: என்ன சொன்னீர்? தமிழகத்தின் தகுதி பற்றி இழித்துரைத்த முதல் மனிதனே நீர்தான். இதோ இதுபோல நூறு மாலை களை வாங்கக்கூடிய ஆற்றலும் செல்வமும் தமிழருக்குண்டு என்பதை மெய்ப்பிக்கிறேன் ...கொடு மாதவி மாலையை! ம்! இதோ ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் பெறுமான முள்ள முத்தாரம்! [என மாதவி கையிலுள்ள மாலையைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்திலுள்ள முத்தா ரத்தை அவள் கையில் தருகிறான். கண்ணகி அதிர்ச்சி] [கோவலன், மேடையினின்றும் இறங்கி கண்ணகி இருக்குமிடம் வந்து...] கோவ: கண் : கண்ணகி, வா-போகலாம்!... அத்தான்!... [மேடையில் கிழவரின் காலில் மாதவி விழுந்து] மாதவி: பெரியவரே! என்னை மன்னித்து கோவ: பயப்படாதே- வா! விடுங்கள்! கி.கிழவர்: இதென்ன வேடிக்கை! ஆயிரத் தெட்டு கழஞ்சு பொன் கொடுத்து மாலையை வாங்குகிறவர் உன்னை அடையலாம் என்றார் கள்!...அதுவும் சபை நடுவில்! இப்போது மாறுவது என்றால்...எனக்கு ஒன்றும் புரிய வில்லையே! [கோவலன் மேடைக்கு வந்து] கோவ: பெரியவரே! மாலையும் வேண்டாம் மாதவியும் வேண்டாம்; வாருங்கள் போக 6UIT LO...... கி.கிழவர்: நன்றாயிருக்கிறது கோவலா; உங்கள் தமிழ் நாட்டு நியாயம்! கோவ: கிழவனுக்கு இளங் கிளி மாலையிடு வது தமிழ் நாட்டுப் பண்பல்ல! அவையும் கலைகிறது. கூட்டத்தோடு கூட்டமாகக் கிரேக்கக் கிழவரும் நழுவுகிறார். கோவலன் - கண்ணகியும் கூட்டத்தோடு வெளியேறுகிறார்கள்.] [கோவலன் போய்விட்டது கண்ட மாதவி வசந்தமாலையிடம்] அவர் மாலையை வாங்கிக்கொண்டு போய்விட்டாரே! வசந்த :ஏன்? என்ன செய்ய வேண்டுமென் கிறாய்?... மாதவி: வசந்தமாலை! சித்ரா : இது கூடவா புரியவில்லை? அவரை வீட்டுக்கு அழைத்துவரச் சொல்கிறாள்... ஏனம்மா மாதவி, அப்படித்தானே?... [மாதவி நாணத்தால் தலைகுனிந்து வசந்த மாலையை நோக்குதல்]