பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகிதிர்வாழ் கோவலன் வீடு:- பள்ளியறை [அழகான மஞ்சம். மஞ்சத்திலே மல்லிகை மலர்கள் பரப்பப் பட்டுள்ளன. பலகணி வழியே நிலவு! நிலவைச் சுற்றி விண் மீன்கள்! நில வொளியில் கோவலனும் கண்ணகியும் ] கண்: அத்தான்! முதலில் நான் பயந்தே விட்டேன். என் நெஞ்சில் நெருப்பு பட்டது போல் இருந்தது அந்த நிகழ்ச்சி. மாத கோவ: அந்த நெருக்கடியிலிருந்து வியை விடுவிக்க அதைத் தவிர வேறு வழி யில்லாமல் போய்விட்டது. கண் : பயத்திலே கூட என் இருதயத்தின் ஆழத்தில் கடல் முத்தைப் போல் நம்பிக்கை குவிந்து கிடந்தது அத்தான்! கோவ : பெண்களே சந்தேகப் பிறவிகள். என் கண்ணகி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? கண் : போங்களத்தான்; நான் உங்களைச் சந்தேகப் படவே மாட்டேன். நீங்கள் என் ஒருத்திக்கு மட்டுமே உரியவர்! கோவ: ஆமாம் கண்ணகி! நீ யில்லாமல் என் வாழ்வுக்குச் சுவையே யில்லை! கண் : ஈடு இணையற்ற என் இன்பப் புதை யலை இடையிலே வந்த மாதவி பறித்துக் கொண்டு போய்விடுவாளோ என நடுங் கினேன். "மாமுது பார்ப்பார் மறைவழி காட்டிடத் தீவலம் செய்து நிகழ்த்திய திருமணம்" சக்தியற்றுப் போய்விடுமோ எனக் கலங்கினேன்!... கோவ : கண்ணகி! அன்று, நீல விதானத்து நித்திலப்பூம் பந்தலின்கீழ் நீயும் நானும் கரம் பிடித்தபோது நெஞ்சில் எழுந்த உறுதியை என்றும் தளர விடமாட்டேன். கண்: உண்மைதானே அத்தான்! என்னை மறக்கமாட்டீர்கள் அல்லவா?... கோவ: மறக்காதது மட்டுமல்ல, பொன்னே! வலம்புரி முத்தே! விரையே! கரும்பே! தேனே! அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே!... என வர்ணித் துக் கொண்டே யிருப்பேன். நீ மலையிடைப் பிறவாமணி! அலையிடைப் பிறவா அமிழ்தம்! யாழிடைப் பிறவா இசை!... மாசறு காசறு 3