பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-9. பிரியாவிடைதந்த பேதை கண்ணகி கோவலன்-கட்டில் அறை [கண்ணகி கையில் மாலையுடன்! தீபம் எரிந்து கொண்டிருக்கிறது: மாலையுடன் பாடிக் கொண்டே, மாலையைக் கோவலன் கழுத்தில் அணிவித்து, அவன் கால்களில் கரந்தொட்டு வணங்குகிறாள். கோவலன் அவளைத் தூக்கி நிறுத்தியவாறு, பெய்யெனப் பெய்யும் மழையே! கொழுநனைத் தொழுதெழும் நேரிழையே!” என்ற பொருளில் பாடுகிறான்... இருவரும் மெய்ம்மறந்து தங்கள் பாசத்தை வெளிப் படுத்துகிறார்கள். பாட்டு முடிகிறது... கோவலன் தனியே சென்று வருத்தமாக அமருகிறான். கண்ணகி அருகே சென்று] கண்: என்னத்தான்...ஏன்? கோவ: ஊட _ல்!... கண்: ஊடலா?...அப்படியென்றால்?... கோவ: சரிதான் போ...ஊடல் என்றால் தெரி யாதா?... திருக்குறள் இன்பத்துப் லேயே தலை சிறந்தது அது தானே...ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் கோபித் துக் கொள்வது; பிறகு சமா சந்தோஷமாக தானமாகி, இருப்பது. கண்: வேண்டாம், வேண் டாம்; கோபிப்பானேன்; பிறகு சமாதானமாவானேன்? கோவ: சமாதானம் ஆவதற் காகவே சண்டை போட்டுக் கொள்வதுதான் கண்ணகி; ஊடல்!... பாலி கண்: அப்படியானால் ஆரம்பமா?... இப்போது ஊடல் கோவ: இது ஒன்றும் ஊடல் இல்லை; கண்ணகி! உனக்குப் பிடிக்காத செய்தி யொன்று சொல்லப் போகிறேன். கண்: என்னத்தான் ?... கோவ: உன்னைப் பிரிந்து செல்லும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது... கண்: ஆ! கோவ: ஆமாம்; நாளைக் காலையில் ரோமாபுரிப் பயணம்! கண் : மறுபடியும் வெளிநாட்டுக்கா?. கண்: அத் தான்; விளையாடுகிறீர்களா? கோவ: இல்லை கண்ணகி; ஐம்பதாயிரம் முத்துக்கள் அகஸ்டஸ் சீமானின் அரண் மனைக்குத் தேவையாம்... அதை ஏற்றிச் செல்ல வேண்டும்... நானே நேரில்!... கண்: கடல் அலையில் கட்டுமரம் போல் தவிப் பதற்கோ பிறந்தேன், இல்லை; இந்தப் பய ணத்தைத் தடுப்பதற்குத் துணிந்தேன். கோவ: தடை வேண்டாம்; தணல் வேண் டாம் உன் விழியில்! புனல் கடந்து ஒளி முத்து விற்று வந்தால், மடை திறந்த வெள்ளம் போல் பொற் காசு குவியும், தமிழர் வளத் தைத் தரணி அறியும். விடை பாவாய் கொடு அத்துடன் விருந்தளிக்கும் உன் இதழ்க் கடையை இங்குக் கொடு! கண்: முத்துச் சுமை ஏற்றிக் கத்து கடல் கீறிச் செல்கை யிலே, குத்து விளக்கொன்றை இங்குச் செத்து மடிய விட்டுச் செல்கின்றோம்... என நினைப் பீரா அத்தான்?...