பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • காட்சி- 13*

(துன்பப் புயலில் கண்ணகி கண்ணகி வீடு [கண்ணகி கண்கலங்கியவாறு அமர்ந் திருக்கிறாள். அப்போது மாசாத்துவானும் அவர் மனைவியும் வருகிறார்கள்...] மாசாத்துவான் : வரமாட்டானம்மா... மாட்டான் !...... கண் : LOIT LOTT !...... வர (எழுகிறாள் கண்ணீரைத் துடைத்தவாறு] மாசாத் அந்த வஞ்சகன் வரமாட்டான் கண்ணகி! வலையிலே விழுந்த மீனாகி விட்டான் கோவலன்!... நீயோ தரையிலே விழுந்த மீனாகி விட்டாய்!... கண்: இல்லை மாமா! நீங்கள் நினைப்பது போல் எதுவும் நடக்கவில்லை... உட்காருங் கள்.... உட்காருங்கள் அத்தை!... இதோ பழம் கொண்டு வருகிறேன் !......... [ஓடிப்போய்ப் பழத்தட்டை எடுத்து வந்து வைக்கிறாள்.] மாசாத் என் அன்பு மருமகளே! தும்பை மலர் போன்ற தூய்மையான உன் இருத யத்தை உணர முடியாத உன்மத்தனை மக னாகப் பெற்றேன் ! மன்னித்து விடம்மா என்னை!... உனக்கேற்பட்ட கவலையை ஒரு நொடியில் நீக்குகிறேன்- இப்போதே மாதவி வீட்டுக்குப் போகிறேன். எனக்கு மகனாகப் பிறந்த மகா பாதகனை விலங்கிட்டு இழுத்து வருகிறேன் !... கண்: வேண்டாம் மாமா! என் விருப்பத் தோடு தான் அவர் மாதவி வீட்டுக்குப் போயிருக்கிறார்.... நான்தான் அவரை வழி யனுப்பி வைத்தேன். நீங்கள் அங்கு போய்த் தாறுமாறாக நடந்துகொண்டால்... அவரை அவமானம் சூழ்ந்து கொள்ளும். நான் பதித்துரோகி யாகிவிடுவேன்! அத்தை: கண்ணகி! என் தங்கமே! உன் னைப்போல ஒரு பெண் என் வயிற்றில் பிறக்க வில்லையே! கண் : அத்தை !... நான் உங்கள் வயிற்றில் பிறந்திருந்தால்... அவர் எனக்குக் கணவ னாகக் கிடைப்பாரா?... மாசாத்: அவனைவிட அழகிலும் குணத்திலும் உயர்ந்தவனை உனக்குக் கணவனாக ஆக்கி யிருப்பேன்.... கண் : மாமா! அவரைக் குறைகூறிப் பேசு வதை என்னால் பொறுக்க முடியாது !..... உங்களைப் பற்றிக் குறைவாகப் பேசினால் அத்தை சும்மாயிருப்பார்களா ?...... மாசாத் : அத்தையா? உன் அத்தையா? கோவலனைப் போல் நான் ஒரு மாதவியைத் தேடிப் போயிருந்தால் இந்நேரம் உன் அத்தை பெரிய இராமாயண -பாரதப் போராட்டமே ஆரம்பித்திருப்பாள். நீதான் வாயில்லாப் பூச்சியாக இருக்கிறாய்!.... கண் : நீங்கள் யாரும் கவலைப்படாதீர்கள்!... அவர் விரைவில் திரும்பி வருவார்.... அவ ருக்கு என்மீதுள்ள அன்பு...நெடு வானத்தில் எழுகின்ற மின்னல் அல்ல! தொடுவானத்து எல்லையையும் கடக்கின்ற ஒளிப்பிழம்பு! என் றைக்கும் அவர் என்னுடையவர் !