பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி -18 இந்திரவிழா-இருமனைகளில் [பல உட்காட்சிகள் அடங்கியது] ( புகார் நகரில் இந்திரவிழா ஆரம்பமாகிறது. புலிக்கொடிவான் நோக்கி ஏற்றப்படுகிறது. யானைமீது முரசம்... நகரெங்கும் விழா எடுக்கின்றனர்... பழந்தமிழ் மன்னன் இந்திரனின் பெரிய சிலையொன்று புலியின்மீது சவாரி செய்வது போல வானைத் தொடும் அளவு கோபுரம்போல் உயர்ந்து நிற்கிறது. இமயமலையின் உச்சியிலே கரிகாலன் நிற்பதுபோல ஒரு பெரிய சிலை வானளாவி நிற்கிறது. பட்டி மண்டபம், முத்துப் பந்தர், தோரண வாயில் எங்கெங்கும் கொண்டாட்டம். கடற்கரையில் கப்பல்களின் அணிவகுப்புக் காட்சி மகளிர், ஆடவர், ஆட்டபாட்டம். பல இடங்களில், பல வகைகளில், கொண்டாட்டங்கள்!) மாதவி வீடு மாதவிக்குக் கோவலன் அலங்கரித்து விடு கிறான். ஆங்குள்ள அணிகளில் எது சிறந்தது எனத் தேர்ந்தெடுத்து அவளுக்கு அணிவிப் பதே பெரிய வேலையாகிவிடுகிறது அவனுக்கு! கோவலனுக்கும் மாதவி அலங்கரித்து விடு கிறாள்... இருவரும் அழகே உருவினராய்ப் புறப்பட்டு...... கூடத்தில் தொட்டிலில் கிடக்கும் மணி மேகலையைத் தூக்கி முத்தமிடுகிறார்கள்.. மணிமேகலை சிறிது வளர்ந்திருக்கிறாள்... சிரிக்கிறாள் பொக்கைவாய் திறந்து !] கோவ: சிரிப்பைப்பார்-சிரிப்பை! மாதவி! மணிமேகலை, உன்னைப் பார்த்து எழுதிய சித்திரம் போலவே இல்லை...? மாத: இல்லை !... எல்லோரும் சொல்லுகிறார் கள்; மணிமேகலை, கண்ணகி யக்காளை உரித்து வைத்ததுபோல் இருக்கிறாளென்று... கோவ: [கேலியாக] ஊம்...... மாத: ஆமாம்!... நான்கூட இவளை அக்கா ளின் குழந்தையாகவே கருதுகிறேன். கோவ: சரி... நேரமாகிறது லாம். வா... போக [குழந்தையை முத்தமிட்டு..பிதாட்டிலில் கிடத்திவிட்டு...ஆங்குள்ள தோழிகளை அருகே விட்டுப் புறப்படுகிறாள்.) [பல பகுதிகளில் விழாக் காட்சிகள்- கூத்து. உற்சாகம் !... மாதவியும் கோவலனும் கலந்துகொள்கிறார்கள்.] கண்ணகி வீடு விழா நடக்கும் ஒலி, கண்ணகியின் காதைப் பிளக்கிறது! ஆகாயத்தில் கிளம்பும் வாண வேடிக்கை மின்னல்போல் அவள் கண்ணைப் பறிக்கிறது!... மகளிர் ஆட்டபாட்டங்கள் ... பேய்க்கூத்து போல் தோன்றுகின்றன. இசைவாணர் இசை வாணிகளின் பாட்டுக்கள்...ஆந்தை, கோட் டான் அலறுவதுபோலத் தெரிகின்றன... கண்ணகி கண்ணையும், காதையும் பொத் திக்கொண்டு அலறி விழுகிறாள். அவள் நினைவில்... இந்திர விழாவன்று தானும் தன் கணவன் கோவலனும் ஆடிப்பாடி மகிழ்ந்தது-நினைவுக்கு வருகிறது. இந்திர விழா நிகழ்ச்சிகள் அவளை மேலும் துயரக் கடலில் ஆழ்த்துகின்றன: துடிக்கிறாள், 37