பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பற்களை மெய்யாகவே முத்துக்கள் என்று மாத: அத்தான்! போதுமத்தான் போதும்! இந்தப் பொல்லாங்கு நேர்வதற்கோ பொழுது கருதி, அவைகளை விலைபேசும் வர்த்தகன் போல என்னிடம் வந்தீர்! இதழ்களிலே பவளமிருக்கிறது; அதை எடுத்துப் போகலாமென்று கள்வனைப்போல் என்னிடம் வந்தீர்! கன்னத்துச் சிவப்பைக் காட்டு ரோஜா எனக்கருதிக், கேட்பதற்கு ஆளில்லை ... பறித்துப் போகலாம் எண்ணி என்னிடம் வந்தீர்! என நீர் எப்படி நினைத்து வந்திருந்தபோதிலும் என் உள்ளங் கொள்ளைகொண்டீர். உடல்... உயிர்...அழகெல்லாம் உமக்கே சொந்தம்! சிலைபோல நிற்கின்ற ஆருயிரே ! தென்னை மரச் சோலையிலே என்னைத் தழுவிடவே எப் போது வருகின்றீர்? புன்னை மரத்தில் அன்னம் உட்கார... அதைச் சூழ்ந்திருக்கும் பூக்களெல்லாம் விண் மீன் என்றும்... நடுவில் உள்ள அன்னந்தான் அமுத நிலவென்றும் நினைத்துக்கொண்டு, மலர் பூத்துவிடும். அழகிய பூம்புகார் நகரத்துக் கலைப் பெண் ணாள் மாதவியைக் காதலால் துடிக்கவிடா மல்... கண்ணாளா வந்துவிடும்... மாவீரா வந்துவிடும்... மன்னவரே வந்துவிடும்... [கோபமாக] விடிந்தது? கோவ: பொழுது விடிந்தது... பொற் கோழி கூவிற்று! புனித நன்மலராம் கண்ணகியை வாடவிட்டுப், புழுதியிலே கிடக்கின்ற பொங் கல்தனை உண்ண வந்தேன் ... அந்த இருட்டு மதி நீங்கிடவே பொழுது விடிந்த தடி; பொல்லாதவளே! மாத: அய்யோ! எனக்கு ஒன்றுமே விளங்க வில்லையே? நா ன் என்ன குற்றம் செய் தேன்? கோவ: ஆகாகா...... கைகாரி ! கானல்வரி நான் பாட, நீ யார் மேலோ மனம் வைத்து மாயப்பொய் பல கூட்டும் காதல் மொழி சிந்தியதை இந்தக் காதுகளால் கேட்டிருந் தேன்! கணிகை வீட்டுக் கட்டுத் தறியும் கண் காட்டி ஆள்மயக்கும் என்ற உண்மைதனை அறியாமல் ஏமாந்தேன்... மாத: அத்தான்! சகிக்க முடியாத சொல் லம்புகளால் என்னைக் கொல்லாதீர்கள்! மாதவி... கணிகைதான்! ஆனாலும், மன் னரே; உமையன்றி என் மனம் யாரையும் நினைத்ததுமில்லை... நினைக்கப் போவதுமில்லை நம்புங்கள் என்னை! கோவ: நிறுத்து... நிறுத்து... மாயக்காரி கோவ: காளையரை ஏமாற்றக் காட்சி வரி... நிறுத்து! மாத: அத்தான்! கோவ:சே! அத்தான்! விலைமகளே! நிலை யில்லா மனம்படைத்த குலம் விளங்க வந் துற்ற குடிகேடி! கலைகாட்டி... கயல் விழிகாட்டி...மயல் முழு தும்காட்டி... மயக்குகின்ற பெண் பேயே! உனை நம்பி உளமிழந்தேன், வளமிழந்தேன்; உற்றார், பெற்றார், உழுவலன்பு கொண்ட நண்பர் அனைவருமே வெறுக்கின்ற பண்பு கொண்டேன். உத்தமியாம் கண்ணகியின் உயிர் கருக்கி... உளம் வருத்தி... உற்சாகச் சகதியிலே...இது வரையில் வீழ்ந்து கிடந் தேன்... இன்றுணர்ந்தேன் ...நீ யார்... நின் குலத்தின் பழம் பெருமை யென்ன என்ற சேதி. கண் கூடு வரி...முதலிய எட்டுவகை நடிப்பு வரியும் கற்றவளடி நீ . தெரியும் எனக்கு! குமிழம்பூ மூக்கும் குவளை மலர்க் கண்ணும் கொண்டு கொவ்வைப் பழம்போன்ற வாய் மொழியால்... இனி இந்தக் கோவலனை ஏமாற்ற ஒருக் காலும் முடியாது! அதோ சிலையாக இருக் கின்றானே உன் இலட்சியக் காதலன்... அவன் அவன் வரும்வரை காத்திரு ! பொருள் தரும்வரையில் காதலியாயிரு! பின் காமக்கடையைக் கட்டி அவன் எதிரே வேறொரு சீமானிடம் நடையைக் கட்டு! போ...போ... உன் குலத்தொழிலைக் குறை வின்றி நடத்து! கோணல் மதி படைத்த வளே !! போ, போ, என் எதிரே நிற்காதே! Gur !...Gur! ... 42 42