பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பகோட்சி-24 கவுந்தியுடன் கண்ணகி கோவலன் வழியில் (கவுந்தி, கண்ணகி, கோவலன் மூவரும் வயல் வெளியில் பசுமை நிறைந்த பயிர்களுக்கு இடையே நடந்து செல்கிறார்கள். மலைத் தொடர்களும் காட்சியளிக் கின்றன] காலில் முள்குத்த ... கண்ணகி கார்ந்து எடுக்கிறாள்.] உட் கோவ: கண்ணகி உனக்கு நான் எவ்வளவு கொடுமை செய்துவிட்டேன். அய்யோ... இப்படி யெல்லாம் நடந்து உனக்குப் பழக் கமேயில்லையே! [முள்ளைக் கோவலன் எடுத்துவிட்டு] இந்த முள்ளைவிடக் கொடுமையானவன் நான்!... இதாவது உன் காலில் காயத்தை உண்டாக்கியது; இந்தப் பாவி உன் நெஞ் சத்திலே அல்லவா...ஆறாத காயத்தை ஏற் படுத்தி விட்டேன்? இந்த முள்ளை விடக் கொடுமையானவன் DIT 60T... [குத்திக் கொள்ளப் போகிறான்] கொடுமையானவன் நான்...என் கண்ணகி படும் கஷ்டத்தைப் பார்க்காமல்..ஏ... முள்ளே! நீயே என் கண்களைக் குருடாக்கி விடு! (தடுத்து...அலறி] கண் : அத்தான்!... என்னத்தான் இது! உங் கள் அழகைப் பார்த்துப் பார்த்து என் துயரங் களை மறக்கிறேனே, அது கூடப் பிடிக்க வில்லையா உங்களுக்கு! என்னை ஆறாத துயரத்தில் அமிழ்த்தி விடாதீர்கள்! கவுந்தி கோவல! "இடுக்கண் வருங்கால் நகுக! என்ற திருக்குறளை மறந்தாயா? துன்பங்களை வெற்றி காணுவதுதான் வீரனுக்கு அழகு- புறப்படு!... இதோ... மதுரைத் தென்றல் கூட வீச ஆரம்பித்து விட்டது.... பாண்டியர் தலைநகர் இன்னும் சிறிது தொலைவுதான்...வாம்மா கண்ணகி- (நடக்கிறார்கள்] நடைபாதையில்-வயல் மடையிலே யிருந்து ஒரு மீன் துள்ளி வரப்பில் விழுந்து துடிக்கிறது!] கவுந்தி ஆகா! ஆபத்தை உணராமல் உற் சாகத்தில் இப்படித்தான் குதிக்கிறார்கள்... சில மனிதர்கள்! கோவ: என்னைப் போல! கவுந்தி : எவ்வளவு அழகான மீன்! பாண்டிய நாட்டுக் கொடியின் சின்னமல்லவா மீன். அதனால்தான் பயமில்லாமல் துள்ளுகிறது! [என்றவாறு அதைத் தண்ணீரில் விடு கிறார்...தண்ணீரில் மீன் நீந்திச் செல்லுகிறது... அதிலிருந்து பாண்டியநாட்டு மீன் கொடி பறக்கும் காட்சி]