பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 56 காட்சி-29ல மெரைச் சிலம்பின் ஒலி மாதரி வீடு (கண்ணகி அடுக்களையில் சமையல் வேலை யில் ஈடுபட்டிருக்கிறாள். கோவலன் வாட்ட மாக அமர்ந்திருக்கிறான். கண்ணகி கோவல னிடம் வந்து] கண்ணகி : அத்தான்! கோவலன் : ம்! கண்: ஏன் வாட்டமாயிருக்கிறீர்கள்? கோவ: மீண்டும் வாணிபத்தைத் தொடங்கு வதற்கு என்ன வழி யென்று தேடிக் கொண் டிருக்கிறேன்! கண் : மதுரையில் நம்முடைய உறவினர்கள் நிறைய இருக்கிறார்கள்; கொற்கை முத்துக் களை விற்றுக் கோட்டைபோல் வீடு கட்டிக் கொண்டிருக்கும் அவர்கள் யாரும் நமக்கு உதவி செய்ய மாட்டார்களா? கோவ: என் தந்தையிடமோ...உன் தந்தை யிடமோ கூடப் பெற வேண்டாமென்ற உதவியை, உறவினர்களிடம் போய்ப் பெறு வதா? கண் : வேறு வழி? கோவ: பாண்டி மண்டிலத்தில் வாணிபம் செய்ய வழியில்லாமல் இல்லை! தொண்டி, கொற்கைத்துறைமுகங்களிலே யிருந்து சங்குகளும், முத்துக் களும், எலி மயிரினால் செய்யப் பட்ட பட்டு நூல் ஆடைகளும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. சங்கை அறுத்து வளையல் செய்யும் தொழில்; தங்கநிற ஆடை நெய்யுந் தொழில்; உப்பு விளைவிக்கும் தொழில்! இப்படிப் பலதொழில் உண்டு பாண்டியத்தில்! எந்தத் தொழிலில் ஈடுபடவும் பொருள் வேண்டும்! கண் : அத்தான்! நான் ஒரு வழி சொல்லு கிறேன், கோபிக்கமாட்டீர்களே? கோவ: என்ன கண்ணகி? கண்: என் திருமணப் பரிசாக ஐம்பதாயிரம் கழஞ்சு பொன்னுக்கு வாங்கித் தந்தீர் களே; அழகான காற்சிலம்புகள்! அவை களை விற்று கோவ: சிலம்புகளையா? கண்ணகி! சிலம்பு களை விற்பதா? அய்யோ; இந்த வார்த் தையை என் காதுகள் கேட்கும் காலமும் வந்ததே! மத்தளம், சங்கு, முரசுகள் முழங்க, மன்னர் பவனிபோல் வெண் பொற்குடை யின் வரிசைகள் விளங்க, மணவிழா கண்ட சுவை மிகு நாளில் அணிந்த சிலம்பை அழிப் போம் என்று,ஆருயிரே; நீ சொல்லியதற்கு... னே காரணம்! நானே காரணம்!! நா கண் : தங்களுக்குப் பயனில்லாமல் அழகுக் கேன் ஆபரணம்? கணீர் கணீர் என கோவ: உன் கமல மலர்ப் பாதங் களில் ஓசை யெழுப்பி, இந்தக் கய வன் இதுவரையில் கழற்றாமல்