பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விட்டு வைத்திருக்கும் ஆபரணம் அது ஒன்று கண் : சிலம்பு விற்ற பொருளில் வாணிபத் தான் என்று இடித்து இடித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறதே; அந்த சுந்தரச் சிலம் பையா விற்றுவரச் சொல்லுகிறாய்? அய்யோ...எப்படிப்பட்ட கஷ்ட காலம் வந்து விட்டது! கண் : நீங்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை. நீங்கள் கஷ்டப்படவே மாட் டீர்கள்! கோவ: எல்லாவற்றையும் சேர்த்துத்தான் உனக்குப் பெரிய தீங்கு செய்து விட்டேனே, கண்ணகி! கண்: போனதை யெல்லாம் நினைத்து மனத் தைப் புலம்ப விடாதீர்கள்! கோவ: கண்ணகி! கண்: வாருங்கள் சாப்பிடலாம்! வெகு நாட் களாயிற்று, என் கையால் சமைத்து உங்க ளுக்கு உணவு பரிமாறி! வாருங்கள்! [அவன் கைதொட்டு அழைக்கிறாள்.) (எழுகிறான்.] [உணவு படைக்கிறாள். பிடுகிறான்.) கோவலன் சாப் கண் : சமையல் எப்படி யிருக்கிறது? கோவ: வழக்கத்தைவிடக் கொஞ்சம் அதிக மாகவே சுவைக்கிறது! கண்ணகி! இதுதான் உன்னுடைய கடைசிச் சமையல்! கண் : ஏன்? கோவ: மீண்டும் வாணிபம் தொடங்கி விட்டால், உன்னைப் பிறகு சமைக்க விட மாட்டேன். சமையலுக்கு ஒரு தனி ஆள்! நாமிருவரும் தனி உலகம்! சரிதானா? [கண்ணகி வெட்கித் தலை குனிந்தவாறு...] கண் சரி சரி! அதற்குள் கோட்டை கட்டா தீர்கள்! சாப்பிடுங்கள்! [கண்ணகி வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுதல்; மடித்தல்; கணவனுக்குத் தாம்பூலம் தருதல்] துக்குத் தேவையானது போக மீதியில் உங்க களுக்கு வேண்டிய பட்டாடைகளும், அணி மணிகளும் வாங்கி வாருங்கள்! நீண்ட நாட்களாகிறது; உங்களுக்கு நான் அலங் காரம் செய்து அழகு பார்த்து! [கேலியாக] கோவ: ம்! [நாணத்துடன்] கண் : ம்! [அப்போது ஐயை உள்ளே ஓடிவந்து ] ஐயை: அண்ணா! அண்ணா! கோவ: என்னம்மா? ஐயை: அண்ணியையும் அழைத்துக் கொண்டு போய்விடாதே, தலைநகருக்கு! கோவ: ஏன்? 8