பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 & காட்சி-30 % சிலம்போ சிலம்பு பொற்கொல்லர் நிலையம் (நூறு பொற் கொல்லர்களையும் நிறுத்தி வைத்துத் தலைமைப் பொற்கொல்லர் கேட்கிறார்] பொற்: ம்...நீதி மன்றத்துக்குச் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது. இப்போதாவது உண்மையைச் சொல்லுங்கள்...யார் சிலம்பை எடுத்தது?.... நூறு பேரும் : நாங்களில்லை!..நாங்களில்லை!... பொற்: பிறகு... சிலம்புக்குச் சிறகு முளைத்தா பறந்து விட்டது!...சரி...சரி...அந்தப் பகற் கொள்ளைக்காரன் யார் என்பதைப் பாண்டிய மன்னரே கண்டு பிடிக்கட்டும்... ம்... புறப் படுங்கள்... என்னோடு!... வீட்டு: யாரோ வாழ்ந்த வீட்டுப் பிள்ளை- கோவலன் வேறு இருவரிடம் சிலம்பை விற்க முயல்கிறான்) ஒரு : அடேயப்பா; விலை மதிக்க முடியாத சிலம்பு! சரி, நீ இதை எடுத்துக் கொண்டு அரண்மனைப் பொற் கொல்லரிடம் போ... அவர் விற்றுத் தருவார்!.. இரண்: அடேடேடே... இதோ அவரே வரு கிறாரே... பொற் கொல்லரே! (பொற் கொல்லர் வருதல்] பொற்: என்ன?.... ஒரு : பொற்கொல்லரே, இவரிடம் ஒரு அழ கான சிலம்பு இருக்கிறது. பொற் சிலம்பு? [அனைவரும் பின்தொடரப் பொற்கொல்லர் ஒரு: ஆமாம்... விலை மதிப்பில்லாத சிலம்பு; புறப்படுகின்றார்] சாலை [கோவலன் ஒரு வீட்டில் சிலம்பை விலை கூறுகிறான்) வீட்டுக்காரர்: எவ்வளவு விலையானாலும் சரி எடுத்துக் கொள்கிறேன். இரட்டைச் சிலம் பாக இருந்தால் கொடு. கோவலன்: ஐயா! இதிலுள்ள மாணிக்கப் பரல்களுக்காக இதைத் தனியாக வாங்கக் கூடியவர் யாரும்... வீட்டு: அதற்கென்றால் அரண்மனைப் பொற் கொல்லரைப் போய்ப் பாரும்... அவருக்கு ஒரு வேளை தேவைப்படலாம். கோவ: வணக்கம் அய்யா... இதை விற்றுத் தர வேண்டுமாம். பொர்: தருகிறேனப்பா. ஏனப்பா, நீ எந்த ஊர்? கோவ: பூம்புகார். பொற் தேடி அலைந்தது தானாகவே கிடைத்து விட்டது! நீ இந்தச் சிலம்போடு இந்த மண்டபத்திலேயே இரு; நான் அரசருக்குத் தெரிவித்து விட்டு உன்னை வந்து அழைத்துப் போகிறேன். கோவ: மிகவும் நன்றி! [வணங்கி உட்காருகிறான். பொற்கொல்லர் மற்றவர்களை அழைத்துச் சைகை செய்தவாறு) பொற்: நீங்கள் இருவரும் இவருக்குத் துணை யாக இங்கேயே இருங்கள். நான் வந்து விடுகிறேன். (பொற் கொல்லர் செல்கிறார்]