பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 காட்சி - 3/ 18= வளந்தது செங்கோல் நெடுஞ்செழியன் பள்ளியறை [அவைக்களம் செல்லுதற்குரிய உடை புனைந்து புறப்படத் தயாராகிவிட்ட பாண்டி யன், அரசியை நோக்கி...) பாண்டியன்: நேரமாகிறதே! நீ புறப்பட வில்லை நீதி மன்றத்துக்கு?... அரசி: நான் வரவில்லை, சிலம்பில்லாத காலோடு! பாண் : இன்று நீதி மன்றத்தில் சிலம்புத் திருடனையுந்தான் கண்டு பிடிக்கப் போகி றேனே! அரசி: ஆகா... எவ்வளவு அக்கறை? உங்களுக் குப் புறப்பாட்டு எழுதவும், போர்த் தளவாடம் சேகரிக்கவும், பொழுதெல்லாம் பாண்டி மண்டிலத்துச் சேதி கேட்கவும் நேரமிருக் குமே தவிரப், பொலிவிழந்து கிடக்கிறதே துணைவியின் பாதம்.. என்ற கவலை வேற இருக்கிறது?... நெடுஞ்செழியன் : உன்னையும் என்னையும்விட நாடு பெரியது என்பதை மறந்து விடாதே!... அற்பச் சிலம்புக்காக...ஒரு அரசி இவ்வளவு கவலைப்படுவதா? அரசி : அற்பச் சிலம்பாகத்தானிருக்கும் தங்க ளுக்கு! நானே அற்பமாகிவிட்டேனல்லவா; அதனால்! நெடுஞ்: சரி...சரி... நீ வருகிறாயா இல்லையா ; நீதி மன்றத்துக்கு? அரசி: சிலம்பில்லாமல் இங்கிருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்கமாட்டேன்... நெடுஞ்: ம்...சரி...வருகிறேன்! [என வேகமாகப் போகிறான்! [வெளியே அதிகாரி (சிலம்புத் திருடன்)தயாராக இருக்கிறான். வணங்கிப் பின்னால் செல்கிறான்) தாழ்வாரம் [அதிகாரி பின் தொடர வேகமாக வரும் அரசன் முன்னே...பொற் கொல்லர் வணங்கு கிறார்] நெடுஞ்: என்ன? பொற்: சிலம்பு திருடிய கள்வன் அகப்பட்டு விட்டான் மன்னவா! நெடுஞ்: எங்கே அவன்? அதிகாரி திடுக்கிட்டு விழித்தல்] பொற்: சிலம்பைப் பழுது பார்த்து விற்பதற்கு முயன்று கொண்டிருந்தான்...அவனைப் பிடித்துப் பத்திரப்படுத்தி விட்டுச் செய்தி சொல்ல ஓடி வந்தேன்... நெடுஞ்: அப்படியா? [அதிகாரியிடம்] பாண்டிய நாட்டில் கள்வனு? ம் உடனே அவனைக் கொன்று வருக!... [அதிகாரியும் பொற் கொல்லரும் புறப் படுதல்] 61