பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 காட்சி - 32 மதுரை ரை மண்ணில் கோவலன் குருதி வீதியிலுள்ள மண்டபம் (பொற்கொல்லர், அதிகாரி, வீரர்கள்; கோவலன் இருந்த மண்டபத்திற்கு வரு கின்றனர்] கோவலன்: பொற்கொல்லரே, காரியம் வெற்றி தானே? பொற்கொல்லர்: நான் போன போன காரியம் வெற்றிதான்! ஆனால் நீ வந்த காரியம்தான் தோல்வியில் முடிந்து விட்டது. கோவ: அப்படியானால் மன்னருக்குச் சிலம்பு தேவையில்லையா? பொற்: மன்னருக்கேன் சிலம்பு? மகாராணிக் கல்லவா வேண்டும். கோவ: (புரியாமல்) பொற் கொல்லரே!- பொற்: சிலம்பை அவரிடம் கொடு. [சிலம்பைக் கோவலன் அதிகாரியிடம் கொடுக்கிறான்) அதிகாரி: உனக்கேது இந்தச் சிலம்பு? கோவ: என் மனைவியின் சிலம்பு! அதி : இதை விற்க வேண்டிய காரணம்? கோவ: வாங்குபவருக்குத் தேவை இல்லாத கேள்வி! அதி : திறமையான திருடன்! கோவ: (திடுக்கிட்டு]... திருடன்... பொற் கொல்லரே! ஏன் இந்தப் பழி என்மீது? இது என்ன அநியாயம்? பொற்: அரசியின் சிலம்பைத் திருடியது மட்டும் நியாயமோ? கோவ: யார் திருடியது உங்கள் அரசியின் சிலம்பை? அதைக் கண்டுபிடிக்கத் திறனற்ற வர்கள்...வழியிலே போகிறவன் மீது பழியைப் போடுவதா? அதி: அடக்கடா வாயை! பஞ்சமா பாதங் களின் நிழல்கூட நுழைய முடியாத பாண்டி மண்டலத்தில் ஓர் பாதகம் உன்னுருவிலே நுழைந்திருக்கிறது என்பதைக் கேட்டு மன்னர் பதைக்கிறார்... துடிக்கிறார்! கோவ: அந்த மன்னரை நான் காணுகிறேன். கள்வனல்ல காவலரே நான்...கருத்தழிந்த காரணத்தால் கைப்பிடித்த மனைவி தனைக் கண்ணீரில் மிதக்கவிட்டுக் கனக மலை, வைர மலை, கணக்கிடவே முடியாத வெள்ளி மலை, அத்தனையும் அழித்துவிட்டுப், பிழைப்புக்கு. வழி தேடிப் பிற நாடு வந்திட்ட மா பாவி! என் சீதளச் செந்தமிழாள்... சிந்தைக்குப் பெரு விருந்து...அவள் செந்தாமரைக் கால் களிலே அணிந்திருந்த சிலம்புதனை விற்பதற் கும் துணிந்துவிட்ட கொடுமையாளன் என விளக்குகின்றேன். ஐயா! தமிழ் படிந்த நெஞ்சமிது... தமிழ்த் தாயின் வயிற்றினிலே கருவாகி உருவாகித் திருநாட்டின் மண்மீது தவழ்ந்தவன் நான்...இருட்டு மதி படைக்க வில்லை; திருட்டுத் தொழில் நடத்துவதற்கு என்பதனைக் கூறுகின்றேன். எந்நாடும் புகழ் கின்ற பெரு வேந்தன் நெடுஞ்செழியன் அவைக் களத்தில் நீதிதனைப் பெறுகின்ற உறுதி எனக்குண்டு, உடன் அழைத்துச் செல்வீர் வேந்தரிடம்! அதி: வேந்தரென்ன உன் வீட்டுக் காவலனா? கோவ: நாட்டுக்குக் காவலன்! நீதிக்கு-நேர் மைக்கு - அறத்துக்கு - அன்புக்கு- தமிழுக்குக் காவலன் நெடுஞ்செழியன்! அநீதி, அணுவி லோர் பாதி அவன் ஆட்சியில் நடைபெறவும் அனுமதிக்கமாட்டான் என்றகிலம் புகழக் கேட்டிருக்கிறேன். அந்தப் பாண்டியத்துப் பெரு வேந்தன் பார்க்கட்டும் என் முகத்தை! கள்வருக்குரிய இலக்கணத்தைக் காண் பானா? களங்கத்தின் சாயல் தனை எடுத்துக் காட்டுவானா ? முகக்குறியால் நீதி சொல்லும் முடிவேந்தன் நெடுஞ்செழியன் முன்னிலையில்