பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. பத்தினியின் சபதம் * ★ பாண்டி வேந்தன் அரியணேயினின்றும் பதறி வீழ்ந்தான். அது கண்ட கோப்பெருங் தேவி அவனிரு தாள்களையும் தொட்டு வணங்கி எல்லேயில்லாத் துயருழந்து, உள்ளம் குலேந்து, உடல் நடுங்கி, கணவனே இழந்தோர்க்குக் காட்டுவது இல்: எ ன் று க த றி அ ழு து வீழ்ந்தாள். அக்காட்சியைக் கண்டாள் கண்ணகி. கோப்பெருங்தேவியின் இறுதி மொழிகள் அவள் இதயத்தில் பொங்கும் அவல உணர்ச் சியை அனல் கக்கும் எரிமலையின் வேகத்தைப் பெறுமாறு செய்தது. ஆருயிர்க் காதலனேச் சாவின் வாயில் அகியாயமாய்ப் பறிகொடுத்து அவதியுறும் அவளுக்கு மன்னனது மரணமும், மாபெருந்தேவியின் மறைவும் எம்மாத்திரம் ! பிரளயமாய்ப் பொங்கி வரும் உணர்ச்சிக்