பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தினியின் சபதம் 91 கடலாய் இருந்த அவள் உள்ளத்திற்கு இவ் விழவுகளால் ஆறுதல் கிட்டுமோ? அரசன் மாளினும், அரசி மடியினும், அனேத்துலகும் அழியினும் அவள் தன் அருமைக் கணவனே மீண்டும் கண்டு உய்தல் கூடுமோ? எ னவே, அவள் எரிமலேயாள்ை. இனியொ ருவிதி செய்வோம்;- அதை எந்த நாளும் காப்போம்; தனியொ ருவனுக் குணவி லையெனில் சகத்தி னயழித் திடுவோம்!” என்று வீர முரசு கொட்டினர் சுதந்தாக் கவிஞர் பாரதியார். பாரதியாரின் பாட்டில் நாம் பார்க்கும் இந்த ஆத்திரத்தைத்தான் அன்னே கண்ணகியின் ஆவேசம் மிக்க சபதத் திலும் காண்கிருேம், கேட்கிருேம். தனியொரு வனுக்கு உணவில்லை எனில் அங்கிலேக்குக் காரணமாய் அமைந்த சமுதாயத்தையே-சகத் தினேயே-சுட்டெரிக்க விரும்பியது விடுதலைக் கவிஞரின் தேசபக்தி. த னியொரு வன் ‘வாழ்தல் வேண்டி வந்த இடத்தில் வஞ்சனைக் குட்பட்டு ஆள்வோன் வாளுக்கு இரையாயின், அவ்வாசை - அரசைக் காக்கும் அறமற்ற சமுதாயத்தை - அழிப்பதே கண்ணகியின் தேசபத்தி. இவ்வுண்மையை வஞ்சினமாலே நமக்கு விளக்கிக்காட்டுகிறது. பாண்டி நாட்டாசிக்குக் தன் நெஞ்சக் கொதிப்பை மேலும் எடுத்துரைக்க வேண்டும் என்ற ஆத்திரம் கண்ணகிக்கு ஆத்திரமிக்க