பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தினியின் சபதம் 93 இந்திய மண்ணில் விளையும் உப்பாய்-விடுதலை பெற்ற தாயகத்தில் வீசும் காற்ருய் இருக்கச் செய்த வீரத்தலைவர் - இந்திய நாடு பெற்ற சர்வ தேசிய ஞானிகளுள் தலே சிறந்த சத் தியவான்-காற்பது கோடி மக்கள்.வாழ ஜேய் ஹிந்த் மந்திரம் கந்த தியாக மூர்த்தி-சுபாஷ் சந்திரர் என்ற உண்மையை அறியாத இந்தியக் குழந்தையும் உண்டோ? அவர் நனவே போலக்கண்ட இளைஞன் கனவிலிருந்து எதி ரொலிக்கும் பொன்மொழியை இங்கே காண் பது பொருத்தமுடையதாகும்: வங்காளிக ளிடையே ஒரு தனிப்பண்பு இருக்கிறது என்பது என் அசையா எண்ணம். கல்வியிலும் அவர்கள் கடைப்பிடிக்கும் கோன் பிலும் மனப்பான்மையிலும் இந்தத் தனிப் பண்பு வெளிப்படுகின்றது. வங்க நாட்டின் இயற்கைத்தோற்றத்திலும்-அதன் மண், நீர், வானம், வயல், நதி வளம் ஒவ்வொன்றிலும்தனித் தன்மை இருக்கிறது." எனவே, இது சர்வ தேசிய உள்ளம் கொண்ட சுபாஷ் பாபுவின் தேசபத்தி! இக் திய தேசபத்தியிலும் தாம் பிறந்து வளர்ந்து மகிழ்ந்து பண்பட்ட பூமியாகிய வங்காளத்திடத் திலேதான் அவருக்கு எவ்வளவு தனிப்பட்ட அன்பு 豪 వ్ల 警 { "இளைஞன் கனவு, பக்கம், 9