பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சிலப்பதிகார விருந்து பாண்டிநாட்டு அரசியிடம் கண்ணகி கூறிய மொழிகளில் இத்தகைய அன்பையே-நாட்டுப் பற்றையே-காம் காண்கிருேம். கோ வேந்தன் தேவியே,யான் யாதுமறியாப் பாவியேன். எனிலும், பிறர்க்கு முற்பகலில் கேடு செய்தார்க்குப் பிற்பகலிலேயே கேடு விளை யும் அன்ருே?’ என்று தமிழ்மறையின் குரல் எதிரொலிக்கப் பேசலுற்ருள் கண்ணகி நெஞ் சத் துயரோடு, அவள் அவல நெஞ்சின் கினே வில் பழங்கதைகள் யாவும் படம் படமாய் விரிய லாயின. புகாரின் பெருமை-தன்னே ஈன்ற தலே நகரில் தோன்றிய பத்தினிப் பரம்பரை யின் சிறப்பு-அவள் கவனத்திற்கு வந்தது. அப்பத்தினிப் பெண்டிருள் எழுவர் புகழை எடுத்தோதினுள். அவருள் ஒரு பத்தினிக்கு வன்னிமரமும் மடைப்பள்ளியும் சாட்சி பகர்ந் தன. காவிரிக்கரையிலுள்ள மணற்பாவையே கின் கணவனும், என்று மாதர் கூற, அலே வந்து அப்பாவையை அழியாதபடி காத்து கின் ருள் ஒர் உத்தமி. இசைப்புலமை வாய்ந்த கரி கால் வளவனின் மகள் ஆதிமந்தி என்பாள், ஆடல் பாடல்களில் பெரும்புலமை வாய்ந்த ஆட்டனத்தி என்ற வஞ்சிக் கோனே மணந்தாள். ஒரு நாள் அவனைக் கடல் நோக்கிக் காவிரி வெள்ளம் ஈர்த்துச் சென்றது. ஆதிமந்தி கன வனத் தேடிச் சென்று கடற்கரையில் நின்று, 'கல் போலும் தோள் படைத்த என் வீரக் கணவரே, என்று கூவி நின்றுள். அவள்