பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திருமண வாழ்த்து முத்தமிழ்க் காப்பியமாகிய சித்திரச் சிலப் பதிகாரத்தின் முதல் காதையாய் விளங்கும் பெருமை சான்றது மங்கல வாழ்த்துப் பாடல். மூன்று பெருங்கா ன்டங்களாகப் பாகு பாடுற்று விளங்கும் செல்வச் சிலப்பதிகாரத் தின் முதற்காண்டமாகிய புகார்க் காண்டத்தின் தலைவாயிலாய் அமைந்துள்ள இம்முதற்காதை, கற்பாசி கண்ணகியும் கலைச்செல்வன் கோவல லும் கடிமணம் புரிந்துகொள்ளும் காட்சியோடு ஆரம்பமாகிறது. ஆம். இளங்கோ அடிகள், காவிய அமைப்பிலுமே புரட்சி புரிந்துள்ளார். இற்றைாாள் இலக்கியங்களில் நவீன முறை என்று நாம் கினைக்கும் ஓர் உத்தியைப் பழங் தமிழ் இலக்கியமாகிய சிலப்பதிகாரத்திலேயே வெற்றிகரமாகக் கையாண்டுள்ளார் புதுமைப் பெரும்பித்தராகிய இளங்கோ அடிகள். காவி