பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரம்பரைப் பண்பு 101 புடை மங்கையின் பொருட்டுக் கடவுட்சத்தி யான இயற்கையும் ஏவல் கேட்கும் என்னும் கொள்கையில் - இருந்த உறுதிப் பாட்டை உணர்ந்து உள்ளம் பூரிக்கலாம். சங்க காலத் தமிழ்ப் பெண்ணின் சரியான கான்முளேயன்ருே வீரக் கண்ணகி அவளுக் கும் இந்த உறுதி இருக்கும் அன்ருே ? இவ் வுறுதிப்பாட்டைக் தாம் எழுதும் காவியத்தில் எதிரொலிக்கச் செய்வது தமிழ்க் கவிஞரின் கடமை அன்ருே ? இக்கடமையை இலக்கிய உள்ளம் படைத்தார் எவரும் போற்றும் வகை யில் வழுவாது ஆற்றியுள்ளார் சிலப்பதிகார ஆசிரியர் என்பதை அவர் காவியத்தைக் கருத் அான்றிக் கற்பார் அறிந்து இன்புறலாம். திருமா பத்தினியின் முன் தோன்றிய தீக் கடவுள், மாபெரும்பத்தினியே, நினக்கு அநீதி புரிந்த நாளில் இப்பெருநகரைத் தீக்கு இரை யாக்க வேண்டுமென்றதொரு கட்டளை எனக்கு முன்னமே உண்டு. எனவே, யான் என் கடமையைச் செய்யப் போகின்றேன். கட்டளை ஏதும் இருந்தால் இடுக. என் தீக்கரங்களி னின்றும் கப்புதற்கு உரியார் யார்? என்ருன். ஆம்! மீண்டும் கண்ணகியின் தேசபக்திக்கு ஒரு சோதனை நேர்ந்தது. சிந்தனே தேக்கிய முகத்தினளாய் கின்ற கண்ணகி, அவ்வமயம் அக்கினிக் கடவுட்குக் கூறிய அமிழ்தனேய பதில், பொன் எழுத்துக்