பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சிலப்பதிகார விருந்து யத்தின் தலைவனேயும் தலைவியையும் அவர்கள் திருவவதார கிலேயிலிருந்து காட்டாமல், அம் மக்களின் வாழ்க்கையில் காவியத்திற்கு இன்றி யமையாததாய் நடைபெறும் முக்கியமான தொரு நிகழ்ச்சியையே முதற்காட்சியாகக் கொண்டு, நாடகப் பண்போடும் இசைச் சிறப் போடும் இயற்சுவையோடும் இலக்கியத்தைத் தொடங்குவது சாலப்புதுமையானதொரு நெறி யாகும். ஆயினும், இந்நெறியைப் பழந்தமிழ் இலக்கிய நெறியாக-இளங்கோ அடிகளின் புரட்சிப்போக்காக-நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது மங்கல வாழ்த்துப் பாடல். இயற்கைச் சத்திகளாகிய சந்திரனேயும் சூரியனையும் மழையையும் வாழ்த்தி, கற்புக் கடவுளாகிய கண்ணகி பிறந்த சோழவள நாட் டின் தலைநகராகிய பூம்புகாரைப் போற்றி, தம் காவியக் கோவிலே உருவாக்கப் புகுகின் மூர் இளங்கோ அடிகள். அங்கிலேயில், "திங் களேப் போற்றுவோம்; ஞாயிற்றைப் போற்று வோம்; மாமழையைப் போற்றுவோம்; பூம்பு காரைப் போற்றுவோம்; ஏனெனில், அவை முறையே சோழ வேந்தனின் குளிர்வெண் குடைபோன்று கண்ணளி புரிதலாலும்,அவன் ஆக்கினு சக்கரம் போன்று பொன்னலாய கொடுமுடி படைத்த மேருவை வலம் வருக லாலும், அவன் கருணயைப் போன்று எஞ் ஞான்றும் விளம் சுரத்தலாலும், தொன்று தொட்டு வரும் அவன் குலத்தோடு பொருந்தி