பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்த்து 3 உயர்ந்து பரந்து புகழ்பெற்று விளங்கலாலும், என்று வாய் நிறைந்த-மனம் கிறைந்த-சொற் களால் மங்கல வாழ்த்துப் பாடு கின் ரு ர் இளங்கோ அடிகள் : திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்! கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றில் வங்கண் உலகளித்த லான். “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்! காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு மேரு வலந்திரித ல்ான். மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்! நாமநீர் வேலி புலகிற்கு அவன்அளிபோல் மேல்நின்று தான்சுரத்த லான். பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்! வீங்குநீர் வேலி யுலகிற் கவன்குலத்தோடு ஓங்கிப் பரந்தொழுக லான்.” (சிலம்பு: மங்கல வாழ்த்து, 1-13) என வரும் இச்செய்யுட்களைத் திரும்பத திரும் பப் படிப்பார் உள்ளம், எடுத்த எடுப்பிலேயே இளங்கோவடிகள் தம் காவியத்தைக் கற்பார் நெஞ்சில் காட்டுப்பற்றை ஊட்டும் திறத்தை எளிதில் உணர்ந்து போற்றும். பழந்தமிழ்க் கலைஞனேப் போன்றே அவன் கால்வழியில் தோன்றிய இளங்கே அடிகட்கும் வானத்திமதியமும், கதிரவனும், வையங்காக் கும். மாமழையும், மன்பதையின் புகழாய் விளங்கும் பூம்புகாரும், படைபபுக்காலத் தொட்