பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

曦 சிலப்பதிகார விருந்து டே பாருலகில் புகழுடன் பொலிவுற்று விளங்கி வரும் மூவேந்தர் குடியுள்ளும் நடுநாயகமாய்த் திகழும் சோழர் குடியையும் அக்குடி புரக்கும் கோவேந்தன் பெருமையையும் அன்ருே கினேவு படுத்துகின்றன. அம்மட்டோ நாடாளும் திரு வுடை மன்னனைப் பரம்பொருளின் அமிச மாகக் காணல் பத்தர்கள் இயல்பு எனில், இயற்கைச் சத்திகளின் திறத்திலும் தன் தாய கத்தின் தலைவனது தனிப்புகழைக் காண்பதே தேச பக்கனின் இயல்பு என்பதை இளங்கோ அடிகளின் வாக்கு நமக்குப் புலப்படுத்து கின்றது. - சிலப்பதிகாரக் கதை பூம்புகாரில் தொடங் குகின்றது. அப்பூம்புகாரின் பெருமையைப் பேச விரும்புகின்ருர் இளங்கோ அடிகள். எவ் வளவு நாட்டுப் பற்ருேடு தம் சிந்தனையில் கிளர்ந்தெழும் செய்திகளே அவர் கூறுகின்றர் பாருங்கள் ! 'தமிழ் வாழும் பொதியமும் தவம் விளங் கும் இமயமும் போன்ற பெருமை சான்றது பூம்புகார். பொதியமும் இமயமும் நடுங்குவ தில்லை; ஒடுங்குவதில்லை; கிலே குலைவதில்லை. அத்தகையதே பூம்புகாரும். செல்வ மிகுதியும் பகையின்மையும் சேர்ந்து விளங்கலால் வேறி டம் பெயர்தலே அறியாத பழங்குடி மக்கள் வாழும் தனிப்புகழ் வாய்ந்த பூம்புகாரின்கண் ஆன்றவிந்தடங்கிய சான்ருேர் பலர் உறைத லான், அம்மாநகர் கிலேயானது என்று கூறு