பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்த்து 5 வாரே அன்றி, அதற்கு இறுதி உண்டு என்று ஒரு போதும் கூருர் முற்றிய கேள்வியால் முழு வதும் உணர்ந்த மூதறிஞர்." இளங்கோ அடிகளின் இக்கருத்தோவியம் எவ்வளவு அழகான சொல்லோவியமாய்-கம் தாய் நாட்டின் புகழ் மிக்கதொரு தலைநகரின் பால் அவர் காட்டும் அ ள வற்ற பத்தியினே எடுத்துக் காட்டும் இணேயிலாக் கவிச் சித்திர மாய் - சிலப்பதிகாரக் காவியத்தில்-மங்கல வாழ்த்துப் பாடலில் காட்சி தருகின்றது! ஆங்கு, - பொதியி லாயினும், இமய மாயினும், பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பின் புகாரே யாயினும், நடுக்கின்றி நிலைஇய என்ப தல்லதை ஒடுக்கங் கூருர் உயர்ந்தோர் உண்மையின் முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே ! (மங்கலவாழ்த்து, 13-19.) இயற்கைத் தாயின்-விண்ணரசியின்இரு கண்களாய் விளங்கும் திங்களையும் ஞாயிற் றையும் காணும் போதும் தமிழ் வேந்தனது தனிப்புகழைப் போற்றும் உள்ளத்தோடேயே கண்டு களித்த இளங்கோ அடிகள், தமிழர சியின் வாச நறுந்திலகமாய் அமைந்த பூம்பு காரைப் போற்றும் போதும் அளவிறந்த நாட் டுப் பற்ருேடு புகழ்ந்து மகிழ்தல் இயல்பே அன்ருே ?