பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகார விருந்து கலேவனுக்கும் தலைவிக்கும் திருமணம் நடைபெ ஆறுகிறது. திருநிறை செல்வியாகிய கண்ணகி, வான்மழை ஒத்த வண்மை பொருங் திய கொடைத்திறம் படைத்த மாநாய்கன் தன் குலம் வாழப் பெற்றெடுத்த பொற்கொடி. பன்னிரண் டாண்டு பிராயத்தினளாகிய அக்கண்ணகிக்கு வாய்க்க திருகிறை செல்வனே, புகார் நகரத்து நாடாளும் வேந்தைேடு ஒருங்கு வைத்து எண் ணக்கூடிய ஒப்பற்ற பெருங்குடி மக்களின் த லே வன ப் விளங்கிய செல்வனும் அறநெறி யால் ஈட்டிய பொருளே எல்லாம் வறியராய் வரும் பிறர்க்கே உரியதாக்கும் அண்ணலும் ஆகிய மாசாத்துவான் என்ற பெயர் படைத்த மாண்பு மிக் கோன் ஈன்ற பதிருைண்டுடைய கோவலன். *தாமரைப்பூவில் பொருந்திய திருமகளின் புகழு டைய வடிவு இவள் வடிவை ஒக்கும், என்றும் 'குற்றமில்லா அருந்ததியின் கற்பு இவள் கற்பை ஒக்கும், என்றும் உலகின் மாகாார் அனைவரும் தன்னைத் தொழுதேத்தும் த ைக மைய ளும் பெருங்குணத்துக் காதலாளும் ஆகியவ ள் கண்ணகி. மண்ணுலகம் சிறுகும்படி வளர்ந்த பெரும்புகழுடையானும் மதிமுக மட வார் பண்ணே வென்ற தம் மொழியால் செவ்வேள்' என்று பாராட்டிக் காதல் கொண்டு போற்றும் கிழமையானும் ஆகியவன் கோவலன். இத்தகு நங்கையும் நம்பியும் திருமணங் கொண்டனர். செல்வமும் கருணேயும் சேரப்படைத்த மாநாய் கன் குடியில் பிறந்த பொற்பும் கற்பும் பொருந்