பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருகண் வாழ்த்து 9. திய கண்ணகிக்கும், பெருமையும் அருமையும் ஒருங்கே பெற்ற மாசாத்துவான் குடியில் தோன்றிய கலேயும் கருணேயும் மிக்க கோவல னுக்கும் நடைபெற்ற அத் திரு ம ன க் கி ன் சிறப்பை இளங்கோ அடிகள் நாம் கண்ணுரக் கண்டு மகிழும் வண்ணம் உணர்ச்சி ததும்பச் சித்திரித்துக் காட்டியுள்ளார். கற்பரசி கண்ண ணகியையும் கலைச்செல்வன் கோவலனையும் ஈன்ற பெருமைபடைத்த இரு பெருங் குரவரும், ஒரு பெருநாளில் தம் மக்கள்தம் மணவனி காண விரும்பினர். அதன் பயனுகப் பூம்புகாரில் மனமுரசு முழங்கியது. மங்கல மகளிர் யானைமீதேறி, அதன் புறக் கழுத்தில் அமர்ந்து, மனமென்னும் செய்தியை மன்பதை அறிய முரசுகொட்டி அறிவித்தனர். அங்கிலையில் முரசம் முழங்கின. மத்தளம் அதிர்ந்தன. வெண்சங்கம் ஊதின. வெண் குடைகள் வேந்தன் உலாவுக்கு எழுந்தாற் போல எழுந்தன. நகரிலே மங்கல அணி எழுந்தது! அவ்வழி, முரசியம்பின முருடதிர்ந்தன. - முறையெழுந்தன பணிலம்வெண்குடை அரசெழுந்ததொர் படியெழுந்தன. அகலுள்மங்கல அணியெழுத்தது.' (மங்கல வாழ்த்து, 45-47) மாலை தொங்கிய வைரமணித்தாண் மண்ட பத்தில் நீலவிதானம் கட்டிய அழகிய முத்துப் பந்தலின்கீழ் மணமக்கள் அமர்ந்தார்கள்.