பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்த்து if விரையினர் மலரினர் விளங்கு மேனியர் உரையினர் பாட்டினர் ஒசித்த நோக்கினர் சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர் விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை மு?ளக்குட திரையினர் முகிழ்த்த மூரலர் போதொடு விரிகடந்தற் பொலன் நறுங் கொடியன்னுர், காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல் - தீதறு 'ெகனஏத்திச் சின்மலர் கொடுதுவி அங்கண் உலகின் அருந்ததி அன்னுளை மங்கல நல்லமனி யேற்றினுர். ' (மங்கல வாழ்த்து, 48-64). இங்கிலேயில் திருமண மக்களைப் பூம்புகார் மாதர் வாழ்த்துவதாக இளங்கோ அடிகள் பாடி யுள்ள இலக்கியப்பகுதி, அறிவும் ஆண்மையும் நிறைந்த தமிழ்ப் புதல்வரை ஈன்றெடுத்து அள விலா இன்பம் காண வேண்டிய மணமக்கள் மட்டுமே அன்றி, யாவரும் அறிந்து மகிழ்வதற்கு உரியதொன்ருய் விளங்குகின்றது. 'இமயமலைக்கு இப்பால் எம் திருமாவள வன் பொறித்த் புலிக்கொடி, அதற்கு அப்பா லாகி மேரு மலேயை அளாவுக! எப்பக்கமும் போர் வெற்றி நிறைந்த எம் சினவேல் செம் பியன் உலகெல்லாம் ஒரு தனியாழி செலுத்தி விளங்குக!” என இத்தகைய வீ று டைய கருத்தமையவே,