பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 参 சிலப்பதிகார விருந்து ஞாலம் முழுவதும் வரினும் வழங்கக் குறையா வளம் கிறைந்து விளங்கியது; பட்டினப்பாக்கம் என்றும் மருவூர்ப்பாக்கம் என்றும் இரு பெரும் பிரிவுகளாய்ப் பிரிந்து, பரந்து விரிந்து கிடந் தது. பட்டினப்பாக்கத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பார் வாழும் பெருங் தெருக்களும்; ஆயுர்வேதர், நாழிகைக் கணக்கர் என்பார் வதியும் விதிகளும்; முத்து, மணி முத லியவற்ருல் மாலே தொடுப்போரும், சங்கு, பவ ளம் முதலியவற்றை அறுத்துக் கடைவோரும் வாழும் வீதிகளும்; சூதர், மாகதர், வேதாளிகர், காடகக் கணிகையர் என்பார் உறையும் தெருக் களும்; பல்வகை இசைக்கருவியாளரும், வேழம் ர் முதலியோரும், தேர்ப்பாகர் யானப்பாகர் குதிரை வீரர் படை வீரர் முதலியோரும் வதி யும் தெருக்களும் இருந்தன. மருவூர்ப்பாக் கமோ, பட்டினப்பாக்கத்திற்குக் கீழ்த்திசைக் கண் விளங்கியது. கடற்கரைப் பகுதியிலமைந்த இம்மருவூர்ப்பாக்கத்தில் பழங்தமிழகத்தின் வாணிகச் சிறப்பையெல்லாம் வளமுறக் காண லாம். ககர வீதியும், அருங்கல மறுகும், கூல வீதியும், பிட்டு, அப்பம், கள், மீன், உப்பு, வெற்றிலே, று விரை முதலியவற்றை விற் போர் வீதியும் இவண் உண்டு. கணக்கற்ற கைத்தொழில் பல செய்து, அவற்றலான பொருள்களே விற்போர் விதிகளும், கலேச்செல் வர்கள் வாழும் கவின் மிக்க, விதிகளும் புலப் பலவாய் மருவூர்ப்பாக்கத்தில் கிறைந்திருந்தன.