பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திர விழாவில்... ... ...! 15 மருவூர்ப்பாக்கத்தின் மாண்பாய் விளங்கிய நகரவீதியில் வேயாமாடம், பண்டசாலை, மான் கட்காதலர் மாளிகை, யவனர்தம் கைத்திற மெல்லாம் காட்டி விளங்கும் பெருமனைகள் முதலியன உண்டு. இத்தகு விதிகளில் வாசனப் பொருள்களை விற்போர் தொகை அளவிடற்கரியதாயிருந்தது. கடல் வளமும் கலை வளமும் மிகுந்திருந்த காவிரிப்பூம்பட்டி னத்தில் கடவுள் மணமும் கமழ்ந்த வண்ணம் இருந்தது. பண்டைத் தமிழ் மக்கள் போற்றி வழிபட்ட தெய்வங்கட்கெல்லாம் இந்நகரின் கண் அழகிய கோட்டங்கள் விளங்கின. இவ்வாறு எல்லா வகையிலும் மேம்பா டுற்று விளங்கிய சோழநாட்டுத் துறைமுகப் பட்டினத்தின் இரு பெரும்பகுதிகளாகிய மரு ஆர்ப்பாக்கத்திற்கும் பட்டினப்பாக்கத்திற்கும் இடையே பரந்த பெரும்பொழில் விளங்கியது. அகன்கண் வானளாவ உயர்ந்த மரங்கள் செறிந்து விளங்கின. அவற்றினடியில் பந்த ரிட்டு வணிகர் பலர் கடை வைத்து வாணிபம் நடத்தினர். பூம்புகார் நகரின் கீழ் மேல் பகுதி கட்கு நடுவண் இருந்த இடை நிலத்தில் அமைந் திருந்த நாளங்காடி எனப்பட்ட அப்பகற்கடை களில், கொடுப்போரும் கொள்வோரும் விளேத்த பேரொலி, இரு பெரு வேந்தர்களின் பாசறைகட்கு இடையேயுள்ள களத்தில் எழுந்த பேரொலி முழக்கத்தைப் போன்று, கடலலை முழக்கத்தினேயும் விஞ்சிக் கேட்கும். இச்செய்