பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சிலப்பதிகார விருந்து தியை இளங்கோ அடிகள், ' கொடுப்போர் ஒதையும் கொள்வோர் ஒதையும் தடுக்கின்றி நிலைஇய நாளங் காடி’ (இந்திரவிழவூரெடுத்த காதை, 62, 63) என்று அழகாக வர்ணிக்கின்ருர்! மேலும், இந் நாளங் காடி யில் வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம், பூதசதுக் கம், பாவை மன்றம் என்னும் ஐவகை மன்றங் களும் காட்சியளித்தன. இவையேயன்றி, நாளங்காடியில் காவற் பூதத்துப் பலிப்பீடிகை ஒன்றும், உயிர்ப்பலி வழங்கும் முழுப்பலிப்பீடிகை ஒன்றும் இருந் தன. நாளங்காடியில் கிலேபெற்றிருந்த அக்கா வற்பூதம், முன்னொரு கால் வெற்றிவேல் மன்ன ஞன முசுகுங்தனுக்கு வந்த துன்பங்களே எல் லாம் தொலேக்க இந்திரல்ை அனுப்பப்பட்ட அந்நாள் தொட்டுப் பூம்புகாரைக் காத்து கின் றது. சித்திரா பெளர்ணமி அன்று மறக்குலப் பெண்டிர் பலர் அழகிய கோலம் பூண்டு வந்து அப்பூதத்தின் பலிப்பீடத்திலே மலர்களேத்துவி னர்; அவரை, எள்ளுருண்டை, கிணச்சோறு முதலியவற்றைப் படைத்தனர்; பொங்கலிட்ட னர்; நறும்புகை காட்டினர்; நாணமில்லார் போல ஆவேசமுற்றுச் சிங்கியடித்துக் கை கோத்துக் குரவை ஆடினர்; வெறி கொண்ட நெஞ்சினராய், எம் மன்னன் ஆளும் நிலமுற் றும், பசியும் பிணியும் பகையும் நீங்கி, மழை பொழிந்து வளம் கொழித்து வாழ்வதாக!"