பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திர விழாவில் ... ... ...! 17 என்று விண்ண திர முழங்கினர். என்னே அவர்தம் காட்டுப்பற்று! முதுகுடிப் பிறந்த மறக்குடி மகளிர் செயல் கள் இவையாக, மருவூரில் வாழ்ந்த மறவவி வீர ரும், பட்டினப்பாக்கத்தில் வாழ்ந்த படை வீர ரும் முங் த ச் சென்று முழுப்பலிப்பீடிகை முன்னே கின்றனர்; தெய்வமே, எங்கள் வீர மன்னனுக்கு நேரவல்ல தீங்குகள் யாவும் நீங்கு மாறு செய்வாயாக!' என்று நெஞ்சுருகிப் பலி கள் கந்து பூதத்தை வணங்கி, ஆரவாரம் புரிந் தனர். வேலும் கவனும் கொண்டு போர்க் களம் புகுந்து மேலும் வென்றியே கொள்ளும் உரநெஞ்சு படைத்த அம்மாவீரர்கள், எங் கள் வேந்தன் என்றென்றும் வெற்றி பெறுக! என்று எழுச்சி கொண்ட குரலால் உணர்ச்சி யின் கொடுமுடியில் நின்று முழங்கினர்கள்; அக்கணமே கொள்ளி போலக் கடை சிவந்த சினம் நிறைந்த பார்வையையுடைய தங்கள் பசுந்தலையை அரிந்து பலிப்பீடத்தில் வைத் தார்கள். இடியின் குரல் போலும் வெடிபடு முழக்கத்தினையுடைய உயிர்ப்பலி கொள்ளும் புலித்தோல் போர்த்த வீரமுரசைக் கொட்டி, தெய்வத்திற்கு வான்பலி வழங்கி, உயிர்ப்பலி தந்தோம்! கொள்க ! கொள்க! எனக் கூவினர் அம்மறக்குல மைந்தர். என்னே அவர்தம் தேசபத்தி அச்சங் த ரும் இக்காட்சிகளே எல்லாம், 2