பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சிலப்பதிகார விருந்து சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென வெற்றிவேல் மன்னற் குற்றதை ஒழிக்கெனத் தேவர் கோமா னேவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகைப் புழுக்கலும் நோலேயும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து துணங்கையர் குரவையர் அணங்கெழுந் தாடிப் பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளறுஞ் சுரக்கென வாழ்த்தி மாதர்க் கோலத்து வலவையி னுரைக்கும் மூதிற் பெண்டிர் ஒதையிற் பெயர, மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும் பட்டின மருங்கிற் படைகெழு மாக்களும் முந்தச் சென்று முழுப்பலிப் பீடிகை வெந்திறல் மன்னற் குற்றதை யொழிக்கெனப் பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம் பாகெனக் கல்லுமிழ் கவனினர் கழிப்பிணிக் கறைத்தோற் பல்வேற் பரப்பினர் மெய்யுறத் தீண்டி ஆர்த்துக் களங்கொண்டோர் ஆரமர் அழுவத்துச் சூர்த்துக்கடை சிவந்த சுடுநோக்குக் கருந்தலை வெற்றி வேந்தன் கொற்றங் கொள்கென நற்பலிப் பீடிகை நலங்கொள வைத்தாங்கு உயிர்ப்பலி புண்ணும் உருமுக்குரல் முழக்கத்து மயிர்க்கண் முரசொடு வான்பலி பூட்டி’ (இந்திரவிழவூரெடுத்த காதை, 64-88) என்று நாட்டுப்பற்றும் வீரவுணர்ச்சியும் கற் பார் நரம்புகளிலெல்லாம் ஏறி வீறு கொள்ளும் வண்ணம் இளங்கோ அடிகள் தம் நூலில் இந்