பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சிலப்பதிகார விருந்து யினைப் பெறுக! என்று வணங்கிச் சென்றன். அடலாண்மையே வடிவெடுத்த கரிகால் வள வனே அப்புண்ணியத்திசை முகத்திலும் யாரும் எதிர்க்கத் துணியவில்லை. எனவே, அவன் தமிழகப்படைகளை இமயமலைவரையில் எவ்வித எதிர்ப்புமின்றி எளிதில் நடத்திச் சென்றன் ; அதற்குமேல் செல்லமுடியாது சற்றே திகைத்து கின்றன். வியப்பும் சீற்றமும் ஒருங்கே அடைந்த சினவேல் செம்பியன், மன்னர் எவரும் மாறு கொள்ள அஞ்சும் எனக்குப் பகை இவ்விமயமோ! என்று வெகுண்டு உரைத்து, அம்மலையின் பிடரில் தன் விரப் புலிக்கொடியை வீறுடன் பொறித்தான். தன்னுடன் போர் புரிய வேங்க டத் தி ற்கு வடக்கே எவரும் இல்லேயே என்று ஏங்கித் திரும்பும் போது சோணுட்டு வேந்தனுக்குச் சோணே நதிக்கரையிலுள்ள வச்சிரநாட்டரசன் தன் முத்துப்பக்தலேத் திறையாகக் கொடுத் தான். வாட்போரில் வல்ல மகத மன்னனே, தன் அருமையான பட்டி மண்டபத்தைத் தமிழ் நாட்டுப் பார்த்திபனின் தாளடியில் காணிக்கை யாகச் சேர்ப்பித்தான். அவந்தி மன்னன் ண்ேடோங்கிய தன் தோரணவாயிலேத் திருமா வளவனுக்குக் களிப்புடன் ஈந்தான். பொன் லுைம் மணியாலும் அழகுற ஆக்கப்பெற்ற இவை மூன்றும் இவற்றிற்குரிய மன்னர்தம் முன்னுேர்க்குச் செய்த உதவிக்காகத் தெய்வத் தச்சனுகிய மயனல் செய்வித்துக் கொடுக்கப்