பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திர விழாவில் ... ... ...! 21 பெற்றவையாகும். பூம்புகாரின் பெருமையாய் விளங்கிய திருமாவளவனது அரண்மனையில் இம்முப்பெரும்பொருளும் அணி செய்து கின்று பெருமையுற்றன. இவ்வுண்மையைக் கூற வந்த இளங்கோ அடிகள், நம் நாட்டின் வேங் தன் ஒருவனது தனிப்புகழைப் பாடும் பேறு பெற்ருேமே!’ என்ற எக்களிப்புடன் பாடும் பகுதியைச் சிலப்பதிகாரப் புகார்க்காண் டத்தில், இந்திரவிழவூரெடுத்த காதையில் நாம் காணலாம். இருநில மருங்கிற் பொருநரைப் பெருஅச் செருவெங் காதலின் திருமா வளவன் வாளுங் குடையும் மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து, நண்ணுர்ப் பெறுகவிம் மண்ணக மருங்கினென் வலிகெழு தோள்,"எனப் புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள், * அசைவி லுக்கத்து நசையிறக் கொழியப் பகைவிலக் கியதிப் பயங்கெழு மலை, என இமையவர் உறையுஞ் சிமையப் பிடர்த்தலைக் கொடுவரி யொற்றிக் கொள்கையிற் யெர்வோற்கு மாநீர் வேலி வச்சிர நன்னுட்டுக் கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும் மகதநன் னுட்டு வாள்வாய் வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபமும் அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்தோங்கு மரபின் தோரண வாயிலும் பென்னினும் மணியினும் புனைந்தன வாயினும் நுண்வினைக் கம்மியர் காணு மரபின; துயர்நீங்கு சிறப்பினவர் தொல்லோ ருதவிக்கு மயன்விதித்துக் கொடுத்த மரபின இவைதாம்’ (இந்திரவிழஆரெடுத்த காதை, 89-108)