பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திர விழாவில் ... ... ...! 23 தலையில் ஏற்றி, வெண்ணிற ஐராவதம் இருக் கும் ஆலயத்தில் இந்திரவிழாவின் முதலும் முடிவும் அறிவிப்பர். கிலேபெற்ற கற்பகத் தருவின் தோட்டத்திலுள்ள மங்கல நெடுங் கொடியை வானுறப் பறக்கவிடுவர். இவ்வாறு முரசறைந்து கொடியேற்றம் செய்து ஆரம்ப மாகும். இந்திரவிழாவைப் பற்றிய செய்திகளே எல்லாம் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் விரி வாகப் பேசுகின்றன. மக்களின் மனவளர்ச் சிக்கும், கலே வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக் கும், சமூக ஒற்றுமைக்கும் பெருந்துணே புரிந்த இவ்விந்திர விழாவின்போது காவிரிப்பூம்பட்டி னத்து வீதிகளெல்லாம் பலவகையாலும் அலங் கரிக்கப்பெற்று, அழகுற்றுத் திகழ்ந்தன. நக ரின் வீதிகளில் பசும்பொன்னுல் செய்த பூரண கும்பங்களும், பாலிகைகளும், பாவை விளக்கு களும், பசும்பொற்கொடிகளும், தாய மயிற்பீலி களும், அழகிய சுண்ணப் பொருள்களும் அணி அணியாய்ச் செறிந்தன. அரசனுடைய ஐம் பெருங்குழுவும், எண்பேராயமும், அரச குமர ரும், பரத குமரரும், குதிரை வீரரும், யானே வீரரும், தேர் வீரரும் ஒருங்கு திரண்டனர். இவ்வாறு திரண்டவர், தம் நாட்டு அரசன் மேம்பாடடைய வேண்டிப் புகழ்பெற்ற எங்கள் வேந்தன் .ெ காற்றம் கொள்வானக என வாழ்த் தினர். ஆயிரத்து எட்டுக் கலசங் களில் தண்ணறுங்காவிரியின் புண் ணி. நன்னிர் கொண்டு மண்ணகம்