பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

சிலப்பதிகார விருந்து


வியப்ப விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டினர். இந்திரன் கோயிலில் மட்டுமன்றி, ஏனைய கோயில்களிலும் விழாமுழக்கம் மிக்கது. சோழ நாட்டு வேந்தன் அருள் சுரந்து தன் பகைவரை எல்லாம் சிறையினின்றும் விடுதலை செய்தான். பண்ணும் பாடலும் எண்டிசையும் முழங்கின. மாந்தர் அனைவரும் ஒரு குடும்பத்துத் தோன்றினவர் போல, உறவுணர்ச்சி குலையாது, நாட்டின் தலையாய விழாவில் பங்கு கொண்டனர். சிறு தெருக்களும் பெரிய வீதிகளும் திருவிழாக் களிப்பில் மூழ்கிக் கிடந்தன. சுருங்கச் சொன்னால், இந்திரப் பெருவிழாவின் சிறப்புக்கள் யாவும் பூம்புகார் நகரத்தின்-அந்நகர மக்களின் வாழ்க்கையின்-ஒவ்வொரு பகுதியிலும் காட்சி அளித்தது என்னலாம்.