பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சிலப்பதிகார விருந்து இறுதியில் கலேயரசி மாதவியின் ஆடலும் பாட இம் ஒருவாறு முடிவு கிலேக்கு வந்தன. அவ ளோடு ஊடல் கொண்டிருந்தான் கோவலன். எனவே, அவன் உள்ளம் உவப்பத் தன்னைப் பல்வகையாலும் அலங்கரித்துக்கொண்டாள் மாதவி. அவ்வலங்கார வருணனையை முப்பத்து மூன்று அடிகளில் விரிவாக ப் பேசுகிருர் இளங்கோ அடிகள். இயற்கை நலனும் செயற்கைத் திறனும் கலந்து விளங்கக் கன்னே அலங்கரித்துக் கொண்டமாமலர் நெடுங்கண்ணுளாகிய மாதவி, கடல் விளையாட்டுக்கான விரும்பித் தன் காதற் கணவனுடன் புறப்பட்டாள். கோவலன் அத் திரி மேல் ஏறினன். மான் விழி மாதவியோ, குதிரை பூட்டிய தேரில் ஏறினுள். இருவரும் கடற்கரை நோக்கி விரைந்தனர். அவ்வமயம் கதி வன் உதயமாகிக்கொண்டிருந்தான். பொய்கைத் தாமரையில் கண்ணு றங்கிய பறவை இனம், காலேக் கதிரொளி கண்டு துயில் நீங்கி எழுந்து, தமிழிசை பாடியது; கோழி கூவி யது; காலே வெண்சங்கு முழங்கியது; வெள்ளி விண் மீன் நள்ளிருள் போக்கியது. அந்நேரத் தில் புறப்பட்ட காதலர் இருவரும் பட்டினப் பாக்கம் மருவூர்ப்பாக்கம் என்ற இருபெரும் பகுதிகளின் எல்லே காண ஒண்ணு வளங்களே எல்லாம் கண்டுகொண்டே கடற்கரை நோக்கிக் 1. «Lovro காதை. 78-108. 2. அத்திரி-கோவேறு கழுதை.