பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதவி நெஞ்சம் 27 சென்றனர். அ ங் கே அரசிளங்குமரரும், அவர்தம் அடிமைத் திரளும், பரத குமாரும், அவர்தம் பல்வகையான ஆய மகளிரும், ஆடும் பெண்டிரும், பாடும் மகளிரும் கூடியிருந்தனர். அப்பொழுது அங்கு விளங்கிய வியத்தற்குரிய காட்சிகளையும், முழங்கிய பல்வேறு ஒசை களின் பெருக்கையும் எண்ணிப் பார்க்கின்ருர் இளங்கோ அடிகள். தம் தமிழக வேந்தனது தனிப்புகழ் அவர் கினே விற்கு வருகிறது. அழகியதோர் உவமை கூறித் தம் உள்ளக் கருத்தைப் புலப்படுத்துகின் ருர் கடற்கரையில் கோவலனும் மாதவியும் சென்ற பொழுது இருந்த பேராரவாரமும் பல்வேறு காட்சிகளும் 'விண்ணிலேறியும் போர் புரியும் பெரும்புகழு டைய கரிகால் வளவன் புதுப்புனலாடும் திரு நாளின் காட்சியை ஒத்திருந்தன என்று கூறுகின்றர்." - கடலாட வந்திருந்த கடலனேய மக்களின் கூட்டத்தைக் கண்டு களித்துக்கொண்டே மாதவி ஆங்கோர் புன்னே கீழல் புதுமணற் பரப்பில் ஒவியத்திறனமைந்த விதானம் விரித்த வெண்கால் அமளிமிசைக் கோவலன் தன்னெடும் கொள்கைப்படி கூடியிருந்தாள். 3. விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன் தண்பதம் கொள்ளுத் தலைநாட் போல வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி

(கடலாடு காதை, 159-162)