பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 சிலப்பதிகார விருந்து அப்போது மணமகள் போல அழகுற விளங் கிய மாதவி, தன் அருமைத் தோழி வயந்தமாலை ஏக்தி கின்ற யாழைத் தொழுது வாங்கிள்ை. அதில் இசை அமைத்துப் பாணி யாது? எனக் கூறிக் கோவலன் கையில் நீட்டினுள். அவன் அதை வாங்கி, அகப்பொருட்சுவை அமைந்த ஆற்றுப்பாட்டும் கடற்கரைப் பாட்டும் பலவா கப் பாடலானன். அவற்றைக் கேட்ட மாதவி மனம் திரிந்தது; யாழிசை மேல் வைத்து ஊழ் வினே வந்து உறுத்தது. ஆகலின், கோவலன் பாடிய கானல் வரிப் பாடல் க ளேக் கேட்ட மான் நெடுங்கண் மாதவி, மன்னுமோர் குறிப் புண்டு : இவன் தன் கிலே மயங்கின்ை, எனக் கருதிக் கலவியான் மகிழ்ந்தாள் போல் புலவி யால் யாழ்வாங்கிப் பாடத் தொடங்கினுள். இவ்வாறு ஊழ்வினை உறுத்த யாழிசைத் துக் கோவலனும் மாதவியும் பாடிய பாடல்களே இளங்கோ அடிகள் தம் காவியத்தில் அழகுற அமைத்துள்ளார். காதற்சுவையும் கற்பனைச் சவையும் மலிந்த அப்பாடல்களில் நாடாளும் காவலனை சோழவேந்தன் புகழே-அவன் பால் காதல் உலகமும் கலையுலகமும் கற்பனை உலகமும் கொண்டிருந்த பற்றே-எதிரொலி செய்வதைக் கேட்கலாம். காவிரி நாடன்-கரிகால் வளவன்-கங்கை நாட்டைத் தன் செங்கோல் ஒச்சிப் புணர்ந் தான்; அதனல், எனக்குரிய கணவன் கங் கையைப் புணர்வதா என்று காவிரி பிணங்க