பக்கம்:சிலப்பதிகார விருந்து.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதவி நெஞ்சம் 23 வில்லை. காரணம், மங்கையர்தம் பெருங்கற் பின் திறம் அதுவாகும்! அவ்வாறே ஆத்தி சூடிய வெண்குடையானகிய சோழன், தன் வளையாச் செங்கோல் ஒச்சிக் கன்னியை-கன் னியா குமரித் துறையைப்-புணர்ந்தான். அப் போதும் காவிரி, 'என் நாயகன் பிறள் ஒரு கன்னியைப் புணர்வதா என்று பிணங்க வில்லை. காரணம், மனவுறுதி படைத்த மாதர் கற்பின் திறன் அது." இக்கருத்துக்கள் அமையக் கோவ ல ன் பாடிய பாடல்கள் இவை: திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோ லதுவோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி ! கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயற்கண்ணுய்! மங்கை மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி! * மன்று மாலை வெண்குடையான் வ8ளயாச் செங்கோ லதுவோச்சிக் கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி ! கன்னி தன்னைப் புணர்ந்தாலும் - புலவா தொழிதல் கயற்கண்ணுய் ! மன்று மாதர் பெருங்கற்பென் றறிந்தேன் வாழி காவேரி' இப்பாடலைக் கேட்ட மாதவி மனத்தில் ஏதோ ஒன்று சுறுக்கென்று ைத த் த து.